அவர் சட்டை பண்ண மாட்டாரு...?
குரு.சுப்ரமணியன்
ஒருவன்: கைத்தடி, ஹேர்டை, செவிட்டு மிஷின் இதையெல்லாம் யாருக்கு பரிசாக் கொடுக்கப் போறே?"
மற்றவன்: அறுபதாம் கல்யாண தம்பதிகளுக்கு...!
*****
ஒருத்தி: வேலைக்காரி விஷயத்திலே உன் புருஷனை ஏன் சந்தேகப்படறே?
மற்றவள்: எனக்கு சுமாரான காபி குடுத்தாக் கூடப் பரவாயில்லை, வேலைக்காரிக்கு நல்ல காபியாக் குடுன்னு சிபாரிசு பண்றாரே!
*****
பெண்: என் புருஷனுக்குத் தூக்கத்திலே நடக்கற வியாதி இருக்கோன்னு சந்தேகமாயிருக்கு... டாக்டர்!
டாக்டர்: எதனாலே?
பெண்: ஜாக்கிங் போறப்போ கனாக் கண்டேன்னு சொல்றாரே!
*****
ஒருத்தி: அந்தப் பல் டாக்டர் ரொம்ப மோசம்...!
மற்றவள்: ஏன்?
ஒருத்தி: அவங்க வீட்டு சீப்பிலே இருக்கற பல்லையெல்லாம் கூட எடுத்துட்டாரே...!
*****
ஒருத்தி: சட்டை போடாமே உன் புருஷன் வெளியே போறாரே?"
மற்றவள்: அதெல்லாம் அவர் சட்டை பண்ண மாட்டாரு...!
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.