பொண்ணு லட்டு மாதிரி இருப்பா...?
தேனி.எஸ். மாரியப்பன்
ஒருவன்: என் காதலி கண்ணால பேசியதை நம்பி கல்யாணம் பண்ணியது தப்பாப் போச்சு!
மற்றவன்: ஏன்...?
ஒருவன்: அவள் வாய் பேச மாட்டாளாம்.
*****
ஒருவன்: நேற்று பெண் பார்க்கப் போன இடத்துல மயங்கி விழுந்துட்டேண்டா...
மற்றவன்: பெண் அவ்வளவு அழகா?
ஒருவன்: இல்லடா... விஷயம் தெரிஞ்சு என் மனைவியும் அங்கே வந்துட்டா...!
*****
ஒருவன்: இண்டர்வியூவில் காசு கொடுத்ததால் ஈஸியாக் கேள்வி கேட்டார்கள்.
மற்றவன்: என்ன கேள்வி கேட்டார்கள்?
ஒருவன்: எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்?ன்னு கேட்டார்கள்.
*****
ஒருவன்: கெஞ்சிக் கேட்டும் என் காதலி முடியாதுன்னு சொல்லிட்டாள்
மற்றவன்: முத்தமா...?
ஒருவன்: இல்லை... நூறு ரூபாய் கடன்.
*****
ஒருவன்: அரசியல்வாதியையும், சாமியாரையும் ஜெயிலில் ஒரே அறையில் வைத்திருந்தது தப்பாப் போச்சு.
மற்றவன்: ஏன்? என்ன ஆச்சு?
ஒருவன்: அரசியல்வாதி ஆன்மீக வாதியாயிட்டார். ஆன்மீகவாதி அரசியல்வாதியாயிட்டார்.
*****
ஒருவன்: உனக்கு கவர்ன்மெண்ட் வேலை வாங்கிட்டியாமே?
மற்றவன்: ஆமாண்டா...!
ஒருவன்: என்ன விலைக்கு வாங்கின?
*****
ஒருவன்: எங்கப்பா ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். இப்ப நானும் சுதந்திரத்திற்குப் போராடுகிறேன்.
மற்றவன்: நாமதான் சுதந்திரம் வாங்கிட்டோமே
ஒருவன்: நான் என் மனைவியிடமிருந்து சுதந்திரம் வாங்கப் போராடிக்கிட்டிருக்கேன்.
*****
ஒருவன்: இந்த பைனான்ஸ் கம்பெனிலே முதலீடு செய்தா கவர்ச்சிகரமான பரிசு...ன்னு சொன்னாங்க...
மற்றவன்: உங்களுக்கு என்ன கொடுத்தாங்க...?
ஒருவன்: நாலு பிராவும், நாலு ஜட்டியும் கொடுத்தாங்க...!
*****
ஒருவன்: பொண்ணு லட்டு மாதிரி இருப்பான்னு பையன் கிட்ட சொன்னது தப்பாப் போச்சு...!
மற்றவன்: ஏன்...?
ஒருவன்: கல்யாணத்திற்குப் பிறகு தினம் பொண்ணைக் கடித்து வைக்கிறானாம்.
*****
ஒருவன்: என் மாமனார் எனக்கு வேலை வாங்கித் தந்து என்னை சரியா பழி வாங்கிட்டார்.
மற்றவன்: என்னடா சொல்றே...?
ஒருவன்: கல்யாணமான ஒரு மாசத்திலே எனக்கு நைட் வாட்ச்மேன் வேலை வாங்கிக் கொடுத்திருக்கார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.