எனக்காக உயிரை விடுவேன்னு...?
குரு.சுப்ரமணியன்
ஒருவன்: என் பெண்டாட்டி வெளுத்ததெல்லாம் பால்னு நினைக்கற டைப்
மற்றவன்: உங்க வீட்டுப் பால் பாயசத்திலே பினாயில் வாசனை அடிக்கறப்பவே நினைச்சேன்.
*****
காதலி: அன்பே, உங்க மேல எனக்கு ரொம்ப கோபம்...!
காதலன்: ஏன்?
காதலி: உனக்காக உயிரையும் விடுவேன்னு அடிக்கடி சொல்றீங்களே தவிர ஒரு தடவை கூடச் செஞ்சு காட்ட மாட்டேங்கறீங்களே...
*****
ஒருத்தி: சண்டை போடற உன் மாமியார் ஊருக்குப் போயிருந்தப்போ எப்படி உனக்குப் பொழுது போச்சு?
மற்றவள்: அடுத்த தெருவிலே இருக்கற என் நாத்தனாரோட சண்டை போட்டுட்டு வருவேன்.
*****
ஒருவன்: அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டெர் வீட்டுக் கல்யாணத்திலே ஏன் கண்ணீர்ப்புகை குண்டு போடறாங்களே எதுக்கு?
மற்றவன்: டைனிங் ஹாலிலே எக்கச்சக்கக் கூட்டம் சேர்ந்து ஒரே ரகளை ஆயிட்டுதாம்.
*****
மனைவி: என் பிரசவ சமயத்திலே உங்களைக் கவனிச்சுக்க என் அம்மாவை வரவழைக்கலாமா?
கணவன்: வயசான காலத்திலே அவங்களைத் தொந்தரவு பண்ண வேண்டாம். உன் தங்கை காலேஜ் படிப்பை முடிச்சுட்டு சும்மாத்தானே இருக்கா, அவளை வரச் சொல்லலாமே.?
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.