கல்யாணமாகும் வரை பிரம்மச்சாரி!
குரு.சுப்ரமணியன்
ஒருவன்: நம்ம ஆளு கொத்தனாரோட எங்கே போறாரு?
மற்றவன்: ஓசோன் படலத்திலே ஓட்டை விழுந்திருக்கறதாச் சொல்றாங்க இல்லியா, அதை அடைக்கத்தான்.
*****
முதலாமவர்: உங்க பையன் பிரம்மச்சாரியாவே இருக்கப் போறானாமே?
இரண்டாமவர்: அப்படியா, என்கிட்டே சொல்லவேயில்லையே?
முதலாமவர்: கல்யாணமாகற வரைக்கும் தான்...
*****
மனைவி: எதிர் வீட்டு வயசான அம்மாவோட ஏன் காரணமில்லாமே அடிக்கடி சண்டை போடறே?
கணவன்: அவங்க பார்க்கறதுக்கு அசப்பிலே உங்க அம்மா மாதிரியே இருக்காங்க.
*****
ஒருத்தி: காசிக்குப் போயிட்டு வந்த உங்க மாமியார் எதை விட்டாங்க?
மற்றவள்: உயிரைத்தான்
*****
ஒருவன்: சிங்காரச் சென்னைங்கற பெயரை ரீங்காரச் சென்னைன்னு மாத்தணும்னு அவங்க போராட்டம் நடத்தறாங்களே ஏன்?
மற்றவன்: சென்னை முழுக்க கொசுத்தொல்லை அதிகமா இருக்கற காரணத்தினாலேதான்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.