மாமனார் சரியான ஏமாற்றுப் பேர்வழி...!
தேனி.எஸ்.மாரியப்பன்
ஒருவன்: எது எதுக்குத்தான் விளம்பரம் கொடுக்கிறதுங்கற ஒரு முறையே இல்லாமல் போச்சு!
மற்றவன்: எதுக்கு விளம்பரம் கொடுத்திருக்காங்க...?
ஒருவன்: ஒருத்தர் "சின்ன வீடு" வேணுமின்னு விளம்பரம் கொடுத்திருக்கார்...!
*****
ஒருவன்: வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களிடம் இந்த டாக்டர் பணம் வாங்க மாட்டார்.
மற்றவன்: ஏன்...?
ஒருவன்: பணம் இருக்காதுன்னு கதையை முடித்து விடுவார்...!?
*****
ஒருவன்: நேற்று இண்டர்வியூவிற்குப் போய் தூங்கி விட்டேன்.
மற்றவன்: அப்புறம்...?
ஒருவன்: நான்தான் கிளார்க்குன்னு நினைத்து நிறையப் பேர் கவரைக் கொடுத்து விட்டுப் போய் விட்டார்கள்.
*****
ஒருவன்: என் மாமனார் சரியான ஏமாற்றுப் பேர்வழி...!
மற்றவன்: எப்படிச் சொல்ற...?
ஒருவன்: எனக்குச் சீதனமா ஒரு வீடு தர்றேன்னு சொல்லி விட்டு அவரோட சின்ன வீட்டைக் கொடுத்திட்டார்.
*****
ஒருவன்: என் காதலிகிட்ட உன்னைக் காதலிக்கிறேன்..னு சொன்னதற்குத் திட்டிட்டா...!
மற்றவன்: எதுக்கு?
ஒருவன்: "ஐ லவ் யூ"ன்னு சொல்றதுக்கு என்ன கேடு வந்ததுன்னு கேட்கிறா...!
*****
ஒருவன்: சின்ன வயசில என் மனைவி விரல் நகத்தைக் கடிப்பாளாம்.
மற்றவன்: இப்போ...?
ஒருவன்: விரலையேக் கடித்துத் தின்னு கொண்டிருக்கிறாள்.
*****
ஒருவன்: எங்க வீட்டில எதுவும் எங்கப்பா சொன்னதுதான் முடிவு...!
மற்றவன்: கரெக்டா சொல்லிடுவாரா?
ஒருவன்: ஆமாம். ராத்திரியிலேயே எங்கம்மா கிட்ட கேட்டு வைத்துக் கொள்வார்...!
*****
ஒருவன்: இந்த டாக்டர் ஆபரேசன் பண்ணினால் எப்படியும்...
மற்றவன்: பேஷண்டைப் பிழைக்க வைத்து விடுவாரா...?
ஒருவன்: இல்ல... பேஷண்டைப் பிழைக்க விட மாட்டார்...!
*****
ஒருவன்: எங்க மேனேஜர் தவறா ஒரு காரியம் செய்துவிட்டு நான் ஒரு மடையன்...ன்னு தன்னைத் தானே திட்டிக் கொண்டார்.
மற்றவன்: நீ என்ன சொன்ன...?
ஒருவன்: உண்மையைத்தானே சொன்னீர்கள்..ன்னு சொன்னேன்.
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|