டாக்டருக்குத் தெரியாமல் தீபாவளி
தேனி.எஸ்.மாரியப்பன்
டாக்டர்: தீபாவளி கொண்டாட நீங்க வீட்டுக்குப் போயிடலாம்...!
நோயாளி: என் வீட்டை வித்துத்தானே உங்க பீஸைக் கொடுத்துக்கிட்டிருக்கேன்.
*****
நோயாளி: டாக்டருக்குத் தெரியாமல் நாம தீபாவளி கொண்டாடிடலாமா?
நர்ஸ்: வேண்டாங்க... என் கணவரும் இந்த ஆஸ்பிடலில்தான் அட்மிட் ஆயிருக்கார்.
*****
பெண்: என் கணவருக்குத் திடீர் திடீர்ன்னு காய்ச்சல் வந்திடுது டாக்டர்..!
டாக்டர்: தீபாவளி சமயத்தில எல்லா ஆண்களுக்கும் வர்ற தீபாவளிக் காய்ச்சல்தான் இது.
*****
ஒருவர்: டாக்டர் மாப்பிள்ளையாப் பார்த்துப் பொண்ணைக் கொடுத்தது தப்பாப் போச்சு!
மற்றவர்: ஏன்...என்ன ஆச்சு?
ஒருவர்: தீபாவளிக்கு எந்தப் பலகாரமும் செய்யவும் விட மாட்டேங்கிறார். சாப்பிடவும் விட மாட்டேங்கிறார்!
*****
டாக்டர்: தலைத் தீபாவளி கொண்டாடப் போய் இப்படி அடி வாங்கிட்டு வந்திருக்கீங்களே...?
நோயாளி: மாமனார்கிட்ட சொத்தில பங்கு கேட்டேன் டாக்டர்!
*****
ஒருவர்: டாக்டர், நான் நேற்றிரவே தீபாவளி கொண்டாடியது போல கனவு கண்டேன்
டாக்டர்: மனநோய் ஆஸ்பத்திரி பக்கத்திலதான் இருக்கு...!
*****
நோயாளி: தீபாவளிக்கு நான் இங்கதான் இருக்கனுமா டாக்டர்?
டாக்டர்: ஆமாம். உங்க மனைவி தலைத் தீபாவளி கொண்டாடப் போறாங்களாம்.
*****
டாக்டர்: பட்டாசு ஆக்ஸிடெண்ட்ல இன்னும் அரை மணி நேரம் கழித்து வந்தாலும் உங்க மாமியாரைப் பிழைக்க வைக்க முடியாது!
பெண்: இதை முன்னாடியே சொல்லித் தொலைத்திருக்கலாமே டாக்டர்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.