எல்கேஜியில கல்யாண வயசுப் பொண்ணு...!
குரு.சுப்ரமணியன்
ஒருவன்: அந்த வீட்டிலெ பேய்த் தொல்லை இருக்கறதா பேசிக்கிட்டாங்களே?
மற்றவன்: அதிலே இப்போ மகளிர் ஹாஸ்டல் வந்திட்டுது.
*****
ஒருவன்: பீச்லே குதிச்சு தற்கொலை பண்ணிக்கப் போன பெண்ணைக் காப்பாத்தினயே, அவ இப்ப எப்படி இருக்கா?
மற்றவன்: முழுகாம இருக்கா.
*****
காதலி: உங்களைக் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு எங்க வீட்லே கடுமையான எதிர்ப்பு இருக்கு.
காதலன்: அதனால்தானே உன்னைக் காதலிக்கறேன்...!
*****
ஜோதிடர்: இனிமே இந்த ஜாதகருக்குக் கல்யாணமே நடக்க வாய்ப்பில்லை.
வந்தவர்: அது எங்களுக்கே தெரியும் ஜோசியரே. அவருக்கு ஏற்கனவே ரெண்டு பெண்டாட்டி இருக்கு.
*****
ஒருவன்: வரவர எதுக்குத்தான் டிரெயினிங் குடுக்கறதுன்னு விவஸ்தை இல்லாமப் போச்சு.
மற்றவன்: ஏன்?
ஒருவன்: பாரேன், "கல்யாணமான பெண்களுக்கு மாமியாருடன் சண்டை போட ஸ்பெஷல் பயிற்சி அளிக்கப் படும்"னு விளம்பரம் வந்திருக்கு.
*****
ஒருவள்: கல்யாண வயசிலே இருக்கற உங்க பொண்ணு இப்போதான் எல்கேஜிலே இருக்காளா!
மற்றவள்: ஆமாம், டீச்சராயிருக்கா.
*****
ஒருவள்: எங்க வீட்டுக்காரர் டிராமாவிலே பெண் வேஷம் போட்டு நடிச்சது செளகரியமாப் போச்சு.
மற்றவள்: எதுக்கு?
ஒருவள்: பெண் வேஷம் போட்டுகிட்டே என் துணிகளைத் துவைச்சிசிடறாரு.
*****
ஒருவன்: உன் வீட்டுக்குத் திருடன் வந்தப்போ நீ ஏன் உன் துப்பாக்கியை உபயோகப்படுத்தலை?
மற்றவன்: அதை அவன் கண்ணிலே படாம ஒளிச்சு வச்சுட்டேனே.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.