யாருக்கு ஆட்டோ இலவசம்..?
குரு.சுப்ரமணியன்
ஆட்டோகாரர்:
இதோ பாருங்க, ஆட்டோவிலே பிரசவத்துக்கு இலவசம்னு போட்டிருக்கறது கர்ப்பிணிப் பெண்களுக்குத்தான். உங்க செல்ல நாயை பிரசவத்துக்கு ஆஸ்பத்திரிக்கு இலவசமாஅழைச்சிகிட்டு போகச் சொல்றது சரியில்லை...
*****
ஒருவர்: அந்த டாக்டருக்கு ஆப்ரேஷனுக்கு பீஸ் இப்போ தரப் போறதில்லைன்னு சொல்றியே, எப்போதான் தருவே?
மற்றவர்: என் இன்சூரன்ஸ் பணத்திலே என் சொந்தக்காரங்க குடுத்திடுவாங்க.
*****
தரகர்: பொண்ணு போட்டோவை ஆபீஸ்லே உன் கிட்டே காண்பிச்சப்போ பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு இப்போ பிடிக்கலைன்னு சொல்றது உனக்கே நியாயமா இருக்கா?
இளைஞர்: ஏதோ தூக்கக் கலக்கத்திலே நான் சொன்னதை அப்படியே என் சம்மதமா எடுத்துக்கலாமா?
*****
ஒருவர்: இந்த கர்நாடக சங்கீத வித்வான் சரியான டிவி பைத்தியமா இருப்பார்னு நினைக்கறேன்.
மற்றவர்: எதனாலே?
ஒருவர்: “டாப் டென் கர்னாடக இசைப் பாடல்களைப் பாடப் போறேன்”னு சொல்றாரே...
*****
ஒருவர்: உங்க வீட்டு வேலைக்காரிக்கு ஏன் இவ்வளவு அதிகமா சம்பளம் தர்றீங்க?
பெண்: இந்தக் காலனியிலே நடக்கற ரகசிய நிகழ்ச்சிகளையும், சண்டைகளையும், கிசுகிசுக்களையும் உடனுக்குடன் FMல் லைவா ஒலி பரப்பறாளே!
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.