சொர்க்கம் போகிறவர்கள்...?
அமெரிக்கக் காங்கிரஸ் (நாடாளுமன்றம்) தேர்தல் வேட்பாளர் ஆபிரகாம் லிங்கன், பிரச்சாரத்திற்காக, ஒரு கூட்டத்தினரை அணுகினார்.
அப்போது அங்கே பேசிக் கொண்டிருந்த மத போதகர் ஒருவர், "உங்களில் யார் யார் சொர்க்கம் செல்ல விரும்புகிறீர்கள்" என்று கூட்டத்தினரை வினவினார்.
எல்லோரும் கைகளை உயர்த்தினர். லிங்கன் மட்டும் கையை உயர்த்தவில்லை.
போதகர் கிண்டலாகக் கேட்டார், "மிஸ்டர் லிங்கன் நீங்கள் எங்கே செல்ல விரும்புகின்றீர்கள்?"
எல்லோரும் உன்னிப்பாக லிங்கனின் பதிலை எதிர்பார்த்தனர். ஏனெனில், சொர்க்கத்திற்கு மறுபக்கம் நரகம்தானே? போதகரும் அந்தப் பொருளில்தான் கேட்டார்.
யாரும் எதிர்பாராத வகையில் லிங்கன் தெளிவான குரலில், "நான் காங்கிரஸ் (நாடாளுமன்றம்) போக விரும்புகிறேன்."
கூட்டம் கை தட்டி ஆரவாரம் செய்தது.
- கணேஷ் அரவிந்த்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.