மருந்திருக்கா...? மாயமிருக்கா...?
சுபஸ்ரீஸ்ரீராம்
கணவன்: கல்யாணமாகி அஞ்சு வருசத்தில ஒரு லாங் டூர் கூப்பிட்டுப் போகனும்னு சொன்னே.. அதான் ராஜஸ்தான் பாலைவனத்துக்குக் கூப்பிட்டு வந்திருக்கேன்.
மனைவி: உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதால என் வாழ்க்கையே பாலைவனமாயிடுச்சே... இதுல இந்தப் பாலைவனம் வேற...
*****
மனைவி: இந்த அரிசியை மிஷன்ல கொடுத்து நைசா அரைச்சுட்டுவாங்க. என்ன புரியுதா?
கணவன்: புரியுது புரியுது. நீ என்னைய வார்த்தையாலே அரைக்காதே...!
*****
டாக்டர்: இங்க பாருங்க பாட்டி நீங்க வீட்டுக்கு போனதும் சாப்பாட்டுக்கு முன் சிவப்பு மாத்திரையையும், சாப்பாட்டுக்கு பின் வெள்ளை, பச்சை, மஞ்சள்ன்னு மூணு மாத்திரையையும் போட்டுக்கணும்.!
பாட்டி: பெரிய டாக்டருன்னு சொல்ற. ஒரு மாத்திரைக்கு கூட பேரு சொல்லத் தெரியல. மாத்திரைங்களை கலரில சொல்ற. எப்படித்தான் டாக்டருக்குப் படிச்சியோ...?
*****
பாட்டி: ஒரு ஊர்ல ஒரு பாட்டி வடை சுட்டுச்சாம். அத ஒரு காக்கா பாத்துகிட்டே இருந்ததாம்!
சிறுவன்: போதும் பாட்டி எத்தன நாளைக்குதான் இந்த கதையை சுட்டுகிட்டே இருப்பீங்க. சுடாம ஒரு புதுகதையை சுடச்சுடச் சொல்லுங்க.
*****
ஆசிரியர்: வாழைப்பழத்திற்கும், வாழைத்தண்டுக்கும் என்னென்ன சிறப்பான மருத்துவக் குணம் உள்ளது?
மாணவன்: வாழைப்பழம் சாப்பிடத் தெரியுமான்னு கேளுங்க சார். சும்மா அதுல மருந்திருக்கா? மாயமிருக்கான்னு கேட்டுக்கிட்டு...
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.