தர்மத்துக்கு என் சொத்து!
ஒரு ஊரில் மிகப் பெரிய செல்வந்தர் வாழ்ந்து வந்தார். ஆனால் அவர் மிகவும் கருமியாக கஞ்சத்தனத்துடன் வாழ்ந்து வந்தார்.
அந்த ஊரில் நடைபெறும் கோவில் சீரமைப்பு, பள்ளிக் கட்டடம் கட்டுதல், கிராம மேம்பாடு போன்ற பல நல்ல செயல்பாடுகளுக்காக ஊர் பொதுமக்கள் பலமுறை போய் கேட்டும் ஒரு பைசா கூட கொடுக்காதவர்.
தீடிரென படுக்கையில் விழுந்தவர் சாகும் தருவாயை அடைந்தார். உடனே ஊர் பொதுமக்களை அழைத்து "எனக்குப் பிறகு எனது சொத்துக்கள் அனைத்தும் தருமத்திற்கே!" என்றார்.
ஊர் மக்களுக்கெல்லாம் அதிர்ச்சி, ஆச்சரியம்.
உடனே அங்கிருந்த ஊர் முக்கிய பிரமுகர் செல்வந்தரிடம், "ஐயா! உங்கள் சொத்துக்கள் அனைத்தும் தருமத்திற்கு தர ஒப்புக் கொண்டதற்கு மிக்க நன்றி! இந்த சொத்துக்களை கல்வி வளர்ச்சிக்காக உபயோகிக்கலாமா? அல்லது மருத்துவமனை கட்ட உபயோகிக்கலாமா?" என்று கேட்டார்.
அதற்கு அந்தப் பெரியவர் "அட நீங்க ஒண்ணு, இந்த சொத்துக்கள் அனைத்தும் எனது மனைவி தருமம் என்கிற தருமாம்பாளுக்கே சொந்தம்” என சொன்னாராம்.
- கணேஷ் அரவிந்த்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.