புயல் வந்துடுச்சு!
தேனி. எஸ். மாரியப்பன்
ஒருவள்: ஒரு சின்னப் பிரச்சனை...ன்னாலும் என் கணவர் விவாகரத்து பண்ணிடுவேன்னு சொன்னார்.
மற்றவள் அப்புறம்...நீ என்ன செய்தே?
ஒருவள்: அவரை நான் விவாகரத்து பண்ணிட்டேன்.
*****
ஒருவள்: பொடிமட்டைக் கலரில சேலை கட்டிக்கிட்டு ஆபிசுக்குப் போனது தப்பாப் போச்சு!
மற்றவள் ஏன் என்ன ஆச்சு?
ஒருவள்: எல்லோரும் தும்ம ஆரம்பிச்சுட்டாங்க!
*****
ஒருவள்:நீ ரொம்ப கொடுத்து வச்சவடி.
மற்றவள்எப்படிச் சொல்றே...?
ஒருவள்:உன் மாமியார்கிட்டே சண்டை போட்டு ஜெயிச்சிடுறியே...!
*****
ஒருவள்:என் கணவரை விவாகரத்து செய்துட்டேன்
மற்றவள்ஏன்? அவருக்கு சமைக்கத் தெரியலையா?
ஒருவள்:இல்லடி. சமைச்சு அம்மாவுக்கு முதலில் சாப்பாடு போடுறார்.
*****
ஒருவள்:என் கணவருக்கு இரண்டாம் கல்யாணம் செய்து வைக்கலாமுன்னு பார்க்கிறேன்...
மற்றவள்ஏன்?
ஒருவள்:என் மாமியார் கூட நான் ஒருத்தியா சண்டை போட முடியலை... அதான்!
*****
ஒருவள்:இன்னைக்குப் புயல் வருமுன்னு வானிலை அறிக்கையில சொன்னது சரியாப் போச்சு!
மற்றவள்அவங்க சொன்ன மாதிரி எதுவும் வரலையே...
ஒருவள்:என் மாமியார் வந்துட்டாங்களே...!
*****
ஒருவள்:திருட வந்தவன்கிட்ட நான் போட்டிருக்கிறது தங்க நகை இல்லை. கவரிங் நகைதான்னு சொல்லியும் திருடிட்டுப் போயிட்டான்.
மற்றவள்அவனுக்கு நீ போட்டிருந்தது தங்க நகைன்னு எப்படி தெரிஞ்சுதாம்?
ஒருவள்:தங்க நகை வாங்கின கடையிலே அட்ரஸ் வாங்கிட்டுத்தான் வந்தானாம்.
*****
ஒருவள்:கட்சித் தலைவியா இருக்கிறது கஷ்டமா இருக்கு...
மற்றவள்ஏன்?
ஒருவள்:தலைவலின்னு சொன்னேன். ஆயிரம் பேர் தலைவலி தைலத்தோட வந்துட்டாங்க!

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.