நீங்க எதுக்கு ரிஸ்க் எடுக்கிறீங்க...?
தேனி. எஸ். மாரியப்பன்
நர்ஸ்1: எங்க டாக்டர்கிட்டே சம்பளம் கூடுதலா வேணுமின்னு கேட்டேன்.
நர்ஸ்2: என்ன சொன்னார்...?
நர்ஸ்1: கிம்பளம் கூடுதலாத் தர்ரேன்னு சொல்றார்.
*****
நோயாளி: டாக்டர், இந்த மருந்தைச் சாப்பிட்டாக் குறைஞ்சிடுமா?
டாக்டர்: எதைச் சாப்பிட்டாலும் குறையத்தானே செய்யும்...
*****
வந்தவர்: டாக்டர், நேற்று இரவு நான் இறந்து விட்டதாகக் கனவு கண்டேன்...
டாக்டர்: கவலையே படாதீங்க! உங்க கனவை நிஜமாக்கி விடுகிறேன்.
*****
டாக்டர்: ஊசி போடுறேன்னு சொன்னாலே இந்த பேசண்ட் அலறுவாரே... நீங்க எப்படி ஊசி போட்டீங்க?
நர்ஸ்: இது போதை ஊசின்னு சொன்னேன் டாக்டர்.
*****
வந்தவர்: நான் தற்கொலை பண்ணிக்கலாமுன்னு கூட நினைச்சேன் டாக்டர்...!
டாக்டர்: நீங்க எதுக்கு ரிஸ்க் எடுக்கிறீங்க... இங்க எதையும் சுலபமாச் செய்திடுவோம்.
*****
வந்தவர்: டாக்டர் எனக்கு சாதாரணமான தலைவலின்னுதானே வந்தேன். இதுக்கு இரத்தப் பரிசோதனை எல்லாம் செய்யனும்கிறீங்களே...?
டாக்டர்: இங்க ஒரு பேசண்ட்க்கு இரண்டு யூனிட் இரத்தம் தேவைப்படுதே...!
*****
நோயாளி: டாக்டர் நான் எவ்வளவு நாளைக்குப் பெட்ல இருக்கனும்.
டாக்டர்: உங்க பெட்டுக்கு இன்னொரு பேசண்ட் வர்ற வரைதான்.
*****
நர்ஸ்1: இந்த பேசண்ட் ரொம்ப வீக்கா இருக்காரு.
நர்ஸ்2: எப்படிச் சொல்ற?
நர்ஸ்1: என்னோட அழகில் அடிக்கடி மயங்கி விழுந்திடுறாரே...!
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.