நம்ம பொண்ணுக்கு டூ வீலர் வேணுமாம்...!
தேனி. எஸ். மாரியப்பன்
ஒருவர்: விடுதலை ஆன பின்பு கூட ஜெயிலை விட்டு நம்ம தலைவர் போக மாட்டேங்கிறாரே?
மற்றவர்: இங்கிருப்பவர்கள் அண்ணன் தம்பி பாசத்தோட பழகிட்டாங்களாம். அதனால போக மனசில்லையாம்.
*****
பத்திரிகை ஆசிரியர்: வெளியான கதைகளை அனுப்ப வேண்டாமுன்னு போட்டிருக்கோமே...?
வந்தவர்: வேறு மொழியில் வெளியான கதைகளை அனுப்ப வேண்டாமுன்னு போடலியே சார்!
*****
காதலன்: அன்பே, நாளை முதல் நீ வீட்டிலிருந்து சுண்டல் கொண்டு வந்து விடு.
காதலி: நீங்க...?
காதலன்: நான் பொறி கொண்டு வந்துடுறேன். இரண்டையும் கலந்து சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம்.
*****
ஆசிரியர்: பள்ளியில் செல்போன் பேசக்கூடாதுன்னு தெரியாதா? அப்புறம் ஏன் செல்போன் கொண்டு வந்தாய்?
மாணவன்: நான் பேசுறதுக்காக செல்போன் கொண்டு வரலை சார்... போரடிச்சா பாட்டு கேட்கலாமுன்னுதான் கொண்டு வந்தேன்.
*****
மனைவி: கட்சிக் கூட்டத்துக்குப் போன நீங்க இப்படி வேஷ்டி கிழிஞ்சு வந்திருக்கீங்களே...?
கணவன்: எல்லாம் கோஷ்டி தகராறுதான்...!
*****
நீதிபதி: உன் கணவரை வேண்டுமென்றுதான் கொன்றாயா?
பெண்: அவர் வேண்டுமென்று கொல்லவில்லை. என்னுடைய காதலர் வேண்டுமென்றுதான் கொன்றேன்.
*****
மனைவி: நம்ம பொண்ணுக்கு டூ வீலர் வேணுமாங்க...
கணவன்: உன் பொண்ணு பின்னால இரண்டு பையன்கள் திரியறானுன்னு சொல்றே...டூ வீலரை நாம் வாங்கிக் கொடுக்கனுமா?
*****
மனைவி: காதலிக்கும் போது வைர அட்டிகை எடுத்துத் தர்ரேன்னு சொன்னீங்களே...?
கணவன்: அதோட நிறுத்தியிருந்தால் பரவாயில்லை... நீ தான் கல்யாணம் வரை கொண்டு வந்து விட்டாயே...!
*****
மனைவி: நீங்கதான் பையில பத்து ரூபா கூட வைத்திருக்க மாட்டீர்களே...? அப்புறம் எதற்காகத் திருடன் உங்களை அடித்தான்?
கணவன்: பத்து ரூபாய் கூட வைத்துக் கொள்ளாத நீ ஏன் வீட்டை விட்டு வெளியில வர்றேன்னு சொல்லி அடிச்சான்...!

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.