திருட்டுச் சிரிப்புகள்
தேனி. எஸ். மாரியப்பன்
ஒருவன்: அந்த வீட்டில திருட வாய்ப்பிருந்தும் ஏன் திருடவில்லை?
திருடன்: சக திருடன் வீட்டுல திருட மனசு வரவில்லை.
*****
ஒருத்தி: என் கணவர் எப்போதும் பாதுகாப்பான இடத்திலதான் திருடுவார்.
மற்றவள்: அப்ப போலீஸ்காரர் வீட்டிலதான் திருடுவாருன்னு சொல்றியா...?
*****
திருடன்1: புதுசா வந்த இன்ஸ்பெக்டர் ரொம்ப மோசம்.
திருடன்2: எப்படிச் சொல்ற?
திருடன்1: அவர் ஏரியாக்குள்ளேதான் திருடனுமின்னு கண்டிசன் போடுறாரு.
*****
வங்கி அதிகாரி: சுயதொழில் செய்ய கடன் வேணுமின்னு கேட்கிறீங்க... என்ன தொழில் செய்யப் போறீங்க...?
வந்தவர்: திருட்டுத் தொழில்தான் சார்!
*****
ஒருவர்: உங்க வீட்டில திருட்டுப் போன பொருட்களெல்லாம் கிடைச்சிடுச்சா? எப்படி?
மற்றவர்: என் வீட்டில் திருடு போன பொருட்களை நானே நல்ல விலைக்கு எடுத்துக் கொள்கிறேன்னு விளம்பரம் கொடுத்தேன்.
*****
ஒருவர்: நீங்க புதுசா பயிற்சி கொடுக்கிறீர்களாமே...? என்ன பயிற்சி அது?
மற்றவர்: சங்கிலி பறிப்பது எப்படி?ன்னுதான்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.