மருத்துவச் சிரிப்புகள்
தேனி. எஸ். மாரியப்பன்
வந்தவர்: கண் ஆபரேசனுக்குப் பின்னாடி கண் நல்லாத் தெரியுமின்னு சொன்னீங்களே டாக்டர்...?
டாக்டர்: ஆமாம்! இப்போ தெரியலியா?
வந்தவர்: இப்பவும் முன்னாடிதான் கண் தெரியுது டாக்டர்.
*****
வந்தவர்: நகம் வெட்டும் போது பிளேடு கையில பட்டுருச்சு டாக்டர்.
டாக்டர்: முதலில் ஸ்கேன் எடுத்துட்டு, பிளட் டெஸ்ட் பண்ணிட்டு வந்துடுங்க!
*****
ஒருவர்: இந்த டாக்டர் ஒரு வித்தியாசமானவரா இருக்காரே...?
மற்றவர்: எப்படி சொல்றீங்க?
ஒருவர்: வைத்தியத்துக்கு முன்னால் நம்மிடம் இருக்கும் அசையும் சொத்து, அசையாச் சொத்து விவரம் எல்லாம் கேட்கிறாரே!
*****
டாக்டர்: போன வாரம்தானே உங்க கணவரை குணப்படுத்தி அனுப்பினேன். அதற்குள்ளே மறுபடி கூப்பிட்டு வந்துட்டீங்களே...?
பெண்: இவர் என் இரண்டாவது கணவர் டாக்டர்.
*****
நகைச்சுவை எழுத்தாளர்: டாக்டரை வைத்து நான் நகைச்சுவை எழுதறது எங்க டாக்டருக்குத் தெரிஞ்சு போச்சு!
நண்பர்: அப்புறம்...?
நகைச்சுவை எழுத்தாளர்: கிடைக்கிற பரிசில் பாதியை அவருக்குக் கொடுத்திடனுமாம்!
*****
டாக்டர்: இன்னும் அரை மணி நேரம் தாமதமாகியிருந்தாலும் உங்க மாமியாரைக் காப்பாற்ற முடியாதம்மா!
பெண்: அய்யய்யோ! எனக்கு இது முன்னாடியே தெரியாமப் போச்சே!

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.