அரசியல் சிரிப்புகள்
தேனி. எஸ். மாரியப்பன்
ஒருவன்: தலைவர் ஜெயிலை விட்டு வெளியே போகமாட்டேன்னு அடம் பிடிக்கிறாராமே?
மற்றவன்: ஆமாம்! அவருக்குக் கள்ள நோட்டு அச்சடிக்க அந்த இடம் வசதியா இருக்குதாம்.
*****
ஒருவர்: லோக்பால், லோக்பால்-ன்னு சொல்றாங்களே... அப்படின்னா என்னாங்க...?
தலைவர்: அது தெரிஞ்சா நான் ஏன் ஜெயிலுக்கு வர்றேன்...?
*****
ஒருவர்: தலைவர் மேலே ஒரு வித்தியாசமான புகார் வந்திருக்காம்...
மற்றவர்: என்ன புகார்...?
ஒருவர்: ஊதுகுழல் வாங்கியதில் ஊழலாம்.
*****
ஒருவர்: ஆட்சியிலே பங்கு கேட்டீர்களே... என்ன ஆச்சு?
தலைவர்: முதல் தவணைக்கான செக் நேற்றே வந்திடுச்சு.
*****
ஒருவன்: அரசியல்வாதியோட மகளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பாப் போச்சு!
மற்றவன்: ஏன்? என்ன ஆச்சு?
ஒருவன்: சின்ன சண்டையானாலும் சேரைத் தூக்கி வீசுறா!
*****
ஒருவர்: சிறையை நவீனப்படுத்தி வசதி பண்ணனும்னு நம்ம தலைவர் சொல்றாரே...?
மற்றவர்: ஆமாம்! அடுத்து ஒரு காலத்திலே தனக்கும் தேவைப்படுமுன்னுதான்!
*****
ஒருவர்: கட்சி கூட்டத்துக்குப் போய் வேட்டி இல்லாமல் வந்திருக்கீங்களே...?
மற்றவர்: கோஷ்டி மோதலில வேட்டியை எவனோ உருவிட்டுப் போயிட்டான்!

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.