தமிழில் விசித்திரமாகக் கவி பாடுவதில் காளமேகப் புலவர் குறிப்பிடத் தக்கவர்.
ஒரு சமயம் நினைத்தே பார்க்க முடியாதபடி புதியதாக எதையாவது சொல்லி அந்தக் கருத்துக்கு ஏற்ப அவர் கவிபாட வேண்டும் என்று மற்ற கவிஞர்கள் போட்டி ஒன்றை வைத்தனர்.
இதற்கு காளமேகப் புலவரும் சம்மதித்தார்.
அங்கிருந்த மற்ற புலவர்கள், “ஒன்றை விட சின்னப் பின்னங்களாக முக்கால், அரை, கால், அரைக்கால், இரும, மாகாணி, ஒரு மா, கீழரை என்கிற எண்ணிக்கைகளை எல்லாம் குறிப்பிட்டு கச்சி ஏகாம்பரர் சம்பந்தமாக ஒரு வெண்பா பாடி காட்டும்” என்றனர்.
”ஆசு கவித்துவம்” என்பதாக உடனுக்கு உடனே கவிபாடும் வல்லமையை அகிலாண்டேசுவரியின் அனுக்கிரகத்தால் பெற்றிருந்த காளமேகம் கொஞ்சம் கூட சிந்திக்காமல் பாடினார்...
முக்காலுக்கு கேகாமுன்
முன்ரையில் வீழாமுன்
அக்கா லரைக்கால் கண்டு
அஞ்சாமுன் - விக்கி
இருமாமுன் மாகாணிக்
கேகாமுன் கச்சி
ஒருமாவின் கீழரை இன்றோது
- மேற்காணும் பாடலில் முக்காலிலிருந்து கீழரையுள்ள அனைத்து எண்களும் வந்து விடுகின்றன. ஆனால், எல்லாம் வேறு பொருளில்
விருத்தாப்யமும், யமபயமும், வியாதியும், சாவும் வருவதற்கு முன்பு கச்சி ஏகம்பனை இப்போதிலிருந்தே ஸ்தோத்திரம் செய். இன்றே ஓது என்பது வெண்பாவின் விளக்கம்.