திருடன் சிரிப்புகள்
தேனி.எஸ்.மாரியப்பன்
திருடன்-1: ஒரு பெண் போலீஸ் என்னைக் கைது பண்ணிட்டாளேன்னு எனக்கு அவமானமா இருக்குடா...!
திருடன்-2: இதிலென்னடா அவமானம்...?
திருடன்-1: அவ என் மனைவிடா...
*****
திருடன்: ஏங்க நாலு முறை உங்க வீட்டில திருடியிருக்கேன். உங்களுக்கு கொஞ்சம் கூட மனிதாபிமானமே கிடையாதா...
வீட்டுக்காரர்: என்னப்பா சொல்றே?
திருடன்: போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் செய்து என்னைப் பெரிய திருடனாப் பதிவு பண்ணுங்க சார்.
*****
வீட்டுக்காரர்: என்னப்பா யார் கூட மொபைல் போனில பேசுற?
திருடன்: என் மனைவி கூடத்தாங்க.. பட்டுச்சேலை மூணு கலரிலே இருக்கு. எது வேணுமின்னு கேட்கிறேன்.
*****
ஒருவர்: ஏம்பா திருட்டுத் தொழிலை விட்டுட்டு அரசியல்வாதியாகி விட்டேன்னு சொல்றீயே வெட்கமாயில்ல...
திருடன்: என்னங்க பண்றது... திருடுறத பங்கு வச்சு பிரிச்சா ஒண்ணுமே மிஞ்ச மாட்டேங்குதே...
*****
நீதிபதி: ஏம்பா போலீஸ் ஸ்டேசனிலேயே திருட ஆரம்பித்திருக்கிறாயே...
திருடன்: எனக்கு ஏரியாவே பிரித்துக் கொடுக்க மாட்டேன்னுட்டாங்க சார்.. நான் என்ன பண்றது...?
*****
வீட்டுக்காரர்:என்னப்பா என் வீட்டில திருடி விட்டு திருடிய பொருட்களுக்கு கையெழுத்து வேற கேட்கிறீயே..
திருடன்: ஆமாங்க... இல்லேன்னா மேலிடத்தில நான் சொல்றத நம்ப மாட்டேங்கிறாங்க...
*****
திருடன்-1: நேற்று நான் திருட போன கம்பெனி முகமூடி தயாரிக்கிற கம்பெனியாம்...
திருடன்-2: அப்புறம் என்ன செய்தாய்?
திருடன்-1: பத்து முகமூடி திருடிட்டு வந்தேன்.
*****
போலீஸ்: உங்க வீட்டில திருட்டு நடந்ததற்கு உங்க பொண்ணும் உடந்தையா இருந்திருக்கிறாங்களே...
வீட்டுக்காரர்: ஆமாங்கய்யா... அவளோட உள்ளத்தையும் திருடன் திருடிட்டுப் போயிட்டான்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.