புத்திசாலி மாமனார்
பிரிட்டிஷ் பிரதம மந்திரியாக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் மருமகன் ஒரு நடிகர். அவருடன் ஏற்பட்ட மன வருத்தம் காரணமாக சர்ச்சில் அவருடன் பேசிக் கொள்வதில்லை. ஆனால் மருமகனுக்கோ தனது மாமனாருடன் நெருங்கிப் பழக வேண்டும் என்கிற ஆசை இருந்தது.
இருவரும் ஒரு விருந்தின் போது சந்தித்துக் கொண்டார்கள்.
இதுதான் தக்க சமயம் என்று நினைத்த அவரின் மருமகன் சர்ச்சிலிடம், "உலகிலேயே பெரிய ராஜதந்திரரி என்று பெயர் பெற்றவர் யார்?" என்று கேட்டார்.
அதற்கு சர்ச்சில், "இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி" என்று பதில் அளித்தார்.
இதைக் கேட்டதும் அவரது மருமகனும், மற்றவர்களும் ஆச்சரியப்பட்டனர்.
"வெறுமனே வேடிக்கைக்காக சொல்கிறீர்கள். முசோலினி அப்படி என்ன பெரிய ராஜதந்திரியா? என்று கேட்டார் அவரது மருமகன்.
சர்ச்சில் ஆற அமர, "இதிலென்ன சந்தேகம்? எங்களுக்குள் அவர் ஒருவர்தான் பெரிய புத்திசாலித்தனமாக நடந்து கொண்டார். எப்படி என்று கேட்கிறீர்களா? தன் மருமகனை அவரே சுட்டுத் தள்ளி விட்டார்!" என்றார்.
இதைக் கேட்டதும் அவரது மருமகன் அதிர்ந்து போய் விட்டார்.
- தேனி. எஸ். மாரியப்பன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.