நம் நாட்டைப் பற்றி என்ன நினைப்பார்கள்?
செஸ்டர்டன் என்பவர் சிறந்த எழுத்தாளர். சற்று பருமனான உடலமைப்பு உடையவர். தன் உடல் அமைப்பில் அவரே பெருமையும் பூரிப்பும் கொண்டவர்.
இவர் ஒரு முறை பெர்னாட்ஷாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, " நீங்கள் நம் நாட்டிற்கு இழிவைத் தேடிக் கொடுக்கிறீர்கள். உங்களைப் பார்க்கும் வெளிநாட்டவர்கள் நம் நாட்டைப் பற்றித் தவறாக மதிப்பிடுவார்கள்." என்று கூறினார்.
பெர்னாட்ஷா, "ஏன்?" என்று கேட்டார்.
செஸ்டர்டன், "உங்கள் உடலில் சதைப் பிடிப்பே இல்லை. ஒல்லியான உங்கள் உடலைப் பார்ப்பவர்கள், நம் நாடு பஞ்சமும் பட்டினியும் கொண்ட நாடு என்று சொல்வார்கள்" என்றார்.
பெர்னாட்ஷாவும் சிரித்துக் கொண்டே, "உண்மைதான். ஆனால் என்னுடைய மெலிவிற்குக் காரணம் உங்களைப் பார்த்ததுமே தெரிந்துவிடும். அனைத்தையும் நீங்களே சாப்பிட்டுக் கொழுத்து விட்டால் எனக்கு எப்படி சதைப் பிடிக்கும்?" என்றார்.
இந்தப்பதிலை எதிர்பார்க்காத செஸ்டர்டன் வாயை மூடிக் கொண்டார்.
- தேனி. எஸ். மாரியப்பன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.