சிலுவையும் சீடர்களும்!
ஒரு முறை சட்டமன்றத்தில்...
அப்போது நிதியமைச்சராக இருந்த சி.சுப்ரமணியம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு டில்லி செல்வதாக இருந்ததால் அவரைப் பாராட்டி வாழ்த்திப் பேசினார். கழக உறுப்பினர் ஒருவர் சி.சுப்ரமணியத்தை இயேசு பெருமானோடு ஒப்பிட்டு வெகுவாகப் புகழ்ந்து பாராட்டினார்.
குறுக்கிட்ட சுப்ரமணியம் இயேசுநாதரைப் போல் சிலுவையில் அறையாமல் இருந்ததால் சரி என்றார்.
இயேசு நாதருடைய சீடர்தான் அவரைக் காட்டிக் கொடுத்தார் என்று உடனே எழுந்து கூறினார் அண்ணா!
அவையில் சிரிப்பொலி எழுந்தது.
உங்கள் கட்சிக்காரர்களால்தான் நீங்கள் எதிர்பார்க்கின்ற தொந்தரவு ஏற்படலாமே தவிர எங்களால் அல்ல என்பதை இவ்வளவு அழகாக நகைச்சுவையுடன் அண்ணா குறிப்பிட்டார்.
- சித்ரா பலவேசம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.