இறக்கை முளைக்குமா?
ஒரு சொற்பொழிவில் கிருபானந்த வாரியார் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, "ராம நாம மந்திரத்தை சொன்ன உடன், இறக்கைகள் வெட்டப்பட்ட சம்பாதியின் இறக்கைகள் மீண்டும் முளைத்தன'' என்றார்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு இளைஞன் குறுக்கிட்டு, வாரியாரிடம் ஒரு கேள்வி கேட்டான்.
"ஒரு கிளியின் இறக்கைகளை நான் வெட்டி விடுகிறேன். நீங்கள் ராம நாமத்தைச் சொல்லி அதற்கு இறக்கை முளைக்கச் செய்திடுங்கள், பார்ப்போம்” என்றார்.
வாரியாரும் அதற்கு நகைச்சுவை ததும்பவே பதில் சொன்னார்.
"கிளிக்கு இறக்கை நிச்சயம் முளைக்கும். நான் சொன்னால் முளைக்குமா என்று தெரியாது. சித்துக்களை செய்தவர்கள் சொன்னால் கட்டாயம் முளைக்கும்” என்றார்.
- கணேஷ் அரவிந்த்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.