சாந்தி முகூர்த்தம் பார்த்துட்டுப் போறேன்...!
தேனி.எஸ்.மாரியப்பன்
டாக்டர்: நீங்க தினம் மூன்று கிலோ மீட்டர் நடக்கனும்.
அப்பாவி சுப்பையா: நடக்கக் கூடியதாச் சொல்லுங்க டாக்டர்!
*****
ஒருவர்: 1977-ல் என்ன நடந்தது?
அப்பாவி சுப்பையா: ஆடு நடந்தது, மாடு நடந்தது, மனிதனும்தான் நடந்தான்.
*****
ஒருவர்: என்ன முதுகு எல்லாம் வீங்கி இருக்கு..?
அப்பாவி சுப்பையா: என்னுடைய வேலைத் திறனைப் பாராட்டி எல்லோரும் முதுகில தட்டினாங்க...!
*****
ஒருவர்: எங்க வீட்டுக்கு யாராவது வந்தா ஃபேன் போட்டு விடுவோம்.
அப்பாவி சுப்பையா: எங்க வீட்டில கொசு வந்தால்தான் ஃபேன் போடுவோம்
*****
ஒருவர்: கவலையை மறக்க குடிக்கிறேன்னு சொல்றீங்களே...அப்படி என்ன கவலை?
அப்பாவி சுப்பையா: குடிச்சு உடம்பு கெட்டுப் போச்சேன்னுதான் கவலை...!
*****
ஒருவர்: ஆபிசுல லஞ்சம் வாங்கினதுக்கு டிஸ்மிஸ் பண்ணிட்டாங்களா?
அப்பாவி சுப்பையா: இல்லை... குறைவா வாங்கிட்டேனாம்...!
*****
ஒருவர்: மனைவி ஓடிப் போயிட்டான்னு சொல்றீங்க... கவலையில்லாமல் இருக்கீங்களே...?
அப்பாவி சுப்பையா: இருக்கும் போதுதான் கவலைப்பட்டேன்...இப்போ எதுக்கு கவலை?
*****
ஒருவர்: நம்ம ஊர் பக்கம் மழை எல்லாம் எப்படி பெய்யுது?
அப்பாவி சுப்பையா: அந்தப் பக்கமும் தண்ணியாகத்தான் பெய்யுது...!
*****
ஒருவர்: எதுக்கு வாயைக் கட்டிக்கிட்டு இருக்கிறீங்க...?
அப்பாவி சுப்பையா: டாக்டர்தான் என்னை வாயைக் கட்டனும்னு சொல்லியிருக்கிறார்.
*****
ஒருவர்: முகூர்த்தம் முடிந்த பிறகு கல்யாணத்துக்கு வந்திருக்கீங்களே...?
அப்பாவி சுப்பையா: சாந்தி முகூர்த்தம் இருக்கே...பார்த்துட்டுப் போறேன்...!
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.