கல்யாணத்துக்கு நூறு பேருடன் வந்திருக்கீங்களே ஏன்?
தேனி.எஸ்.மாரியப்பன்
ஒருவர்: நீங்க வீட்டை விட்டு வெளியில் போகும் போது பூனை குறுக்கே போனதாமே... என்ன ஆச்சு?
அப்பாவி சுப்பையா: அந்தப்பூனை லாரியில் அடிபட்டு செத்துப் போச்சு
*****
ஒருவர்: இலவசமா செருப்பு கொடுத்தாங்களே... எப்படி இருக்கு?
அப்பாவி சுப்பையா: இரண்டு காலும் புண்ணாகி இருக்கு.
*****
ஒருவர்: உங்களை வேலையிலிருந்து தூக்கிட்டாங்களே...பேசாமல் முதலாளியம்மா கையைக் காலைப் பிடிக்க வேண்டியதுதானே...?
அப்பாவி சுப்பையா: அதனாலதான் என்னை வேலையிலிருந்து நீக்கினாங்க...!
*****
ஒருவர்: டாக்டர் உங்களைப் பூரியே சாப்பிடக் கூடாதுன்னு சொல்லிட்டாரா...ஏன்?
அப்பாவி சுப்பையா: ஆமாம் பூரிக்குள்ள இருக்கிற காற்று போய் வயிறு உப்பிடுது.
*****
பல் டாக்டர்: உங்க மனைவிக்கு நான்கு பல் எடுக்க வேண்டியிருக்கும்...!
அப்பாவி சுப்பையா: அவ வச்சிருக்கிறது பல்செட்தானே... முழுசாக் கூட எடுத்துக்குங்க டாக்டர்...!
*****
ஒருவர்: லஞ்சத்தை ஒழிக்கனும்னு ஊர் ஊராப் போனீங்க...இப்ப ஏன் போகறதில்லே...?
அப்பாவி சுப்பையா: எனக்கு ஒரு லட்ச ரூபா கொடுத்து நிறுத்தச் சொல்லிட்டாங்க!
*****
டாக்டர்: நீங்க யூரின், மோசன் எல்லாம் ஃபிரியாத்தானே போறீங்க...?
அப்பாவி சுப்பையா: இல்ல டாக்டர்...ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்ன்னு கொடுத்துத்தான் போக வேண்டியிருக்கு.
*****
ஒருவர்: நாட்டில கொள்ளையடிக்கிறதும், திருடுவதும் அதிகமாகிக்கிட்டிருக்கே... இதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க...?
அப்பாவி சுப்பையா: அதுதானுங்க முதல் போடாத தொழிலாயிருக்கு...!
*****
ஒருவர்: என்னது கல்யாணத்துக்கு நூறு பேருடன் வந்திருக்கீங்க...?
அப்பாவி சுப்பையா: நீங்கதானே சுற்றம் சூழ வருகன்னு பத்திரிகையில போட்டிருந்தீங்க...!
*****
மனைவி: என்னங்க ஒரு செருப்பு மட்டும் வாங்கிட்டு வந்திருக்கீங்க...?
அப்பாவி சுப்பையா: நீ தானே செலவைக் குறைக்க இந்த மாசத்திலிருந்து நாம வாங்குறதைப் பாதியாக் குறைக்கனும்னு...!
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.