திருட வந்தவனுக்குப் பெண்ணோட ஜாதகம் எதுக்கு?
தேனி.எஸ்.மாரியப்பன்
ஒருவர்: நடிகைகள் எல்லாம் நீச்சல் உடையில் இருக்கிறாங்களே...?
அப்பாவி சுப்பையா: இன்னைக்கு ரசிகர் வெள்ளத்தில நீச்சலடித்து வரப் போகிறார்களாம்.
*****
ஜோதிடர்: உங்க பொண்ணுக்கு ஏழாமிடத்தில சந்திரன் இருந்தானே...?
அப்பாவி சுப்பையா: அவன்தான் சார் என் பொண்ணைத் தள்ளிக்கிட்டுப் போயிட்டான்.
*****
ஒருவர்: போலிச் சாமியார் இல்லைன்னு சொல்றீங்க... அப்புறம் எதுக்கு அவரைக் கைது பண்றாங்க?
அப்பாவி சுப்பையா: அவர் புரளி கிளப்பி விடும் புரளிச் சாமியாராம்!
*****
ஒருவர்: நீ திருமணம் பண்ணிக்க வேண்டாமுன்னு முடிவு பண்ணிட்டியா ஏன்?
அப்பாவி சுப்பையா: இருக்கிற இரண்டு மனைவி போதுமுன்னுதான்.
*****
டாக்டர்: இவருக்கு அதிர்ச்சியான செய்தி எதுவும் சொல்லக் கூடாது.
அப்பாவி சுப்பையா: அப்படியானால் உங்களுக்குப் பில் கிடைக்காது.
*****
ஒருவர்: கொடுத்த கடனைக் கேட்டா எழுதியிருக்கேன்னு சொல்றீங்களே... கதை எழுதியிருக்கீங்களா...?
அப்பாவி சுப்பையா: இல்லைங்க... மாமனாருக்குக் கடிதம் எழுதியிருக்கேன்..!
*****
அதிகாரி: உங்க வீட்டில இரண்டு கோடி ரூபாய் பணமிருக்கே... இதற்கு என்ன சொல்றீங்க?
அப்பாவி சுப்பையா: சொல்றதுக்கு என்ன இருக்கு...உங்களுக்கு வேணுமின்னா கொஞ்சம் எடுத்துக்கங்க...
*****
வீட்டுக்காரர்: திருட வந்த நீ என்னோட பெண்ணின் ஜாதகத்தைக் கேட்கிற?
அப்பாவி சுப்பையா: என் மகனுக்குப் பெண் பார்த்துக்கிட்டிருக்கேனே...!
*****
இன்ஸ்பெக்டர்: உங்க மனைவி ஊரிலிருந்து வந்துட்டாங்களான்னு இங்க வந்து எதுக்குக் கேட்கிறீங்க...?
அப்பாவி சுப்பையா: ஊரிலிருந்து வருகிறேன். காலை பத்து மணிக்கு ஸ்டேசனுக்கு வாங்கன்னு போன் பண்ணிச் சொன்னாளே...!
*****
டாக்டர்: உங்க மனைவிக்கு இருதய ஆபரேசன் வேணாமின்னு சொல்றீங்களே ஏன்?
அப்பாவி சுப்பையா: எனக்கு நல்லாத் தெரியும். அவளுக்கு இருதயமே கிடையாது டாக்டர்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.