கூடப் பிறந்த அக்கா தூரத்து உறவா...?
தேனி.எஸ்.மாரியப்பன்
ஒருவர்: உங்க கூடப் பிறந்த அக்காவைத் தூரத்து உறவுன்னு சொல்றீங்களே...?
அப்பாவி சுப்பையா: ஆமாம்! அவ அமெரிக்காவில இருக்காளே...!
*****
ஜோதிடர்: உங்க பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறதுல உங்க மனைவியோட கருத்து வேறுபாடாமே..?
அப்பாவி சுப்பையா: ஆமாம்! அவ என்னைப் போல அசட்டு மாப்பிள்ளையாப் பார்க்கனும்னு சொல்றா...!
*****
ஒருவர்: ஜவுளிக்கடையில பேண்ட், சர்ட்டாவே திருடுறீயாமே...ஏன்?
அப்பாவி சுப்பையா: தையல் கூலி அதிகமா இருக்குன்னு யாரும் துணி வாங்க மாட்டேங்கிறாங்களே...!
*****
ஒருவர்: உங்க மனைவி உதைக்கிற அளவுக்கு நீங்க என்ன சொன்னீங்க...?
அப்பாவி சுப்பையா: போடி கழுதைன்னு சொல்லி திட்டினேன்.
*****
டாக்டர்: உங்க மனைவி புத்தகப் பைத்தியமுன்னு சொல்றீங்களே... எப்பவும் படிச்சுக்கிட்டே இருக்கிறாங்களா?
அப்பாவி சுப்பையா: இல்லே டாக்டர் கிழிச்சுக்கிட்டே இருக்கிறாள்.
*****
ஒருவர்: உங்க மாமனார் உங்களுக்கு வெள்ளிவிழா கொண்டாடப் போறாராமே...?
அப்பாவி சுப்பையா: அவரோட மகளுடன் இருபத்தைந்து ஆண்டுகள் குடும்பம் நடத்திட்டேனாம்..!
*****
ஒருவர்: உனக்கு ஸ்கேன் பார்த்ததும் டாக்டர் உன்னை ஆஸ்பத்திரியிலிருந்து துரத்திட்டாராமே...??
அப்பாவி சுப்பையா: என்னோட இதயத்தில அவரோட நர்ஸ் நளினி இருந்தாளாம்.
*****
ஒருவர்: கூட்டத்தில தலைவரைப் பொறுக்கி...ன்னு சொல்லிட்டீங்களா? அப்புறம் என்ன ஆச்சு?
அப்பாவி சுப்பையா: பொறுக்கி எடுத்த மாணிக்கம்...ன்னு சொல்லி சமாளித்தேன்!
*****
இன்ஸ்பெக்டர்: உங்க மனைவி கட்டின சேலையை அவிழ்த்துக்கிட்டுப் போகிறவரை என்ன செய்துக்கிட்டிருந்தாங்க...?
அப்பாவி சுப்பையா: தொலைக்காட்சியில சீரியல் பார்த்துக்கிட்டிருந்தா சார்..!
*****
டாக்டர்: உங்க மனைவிக்கு என்ன பிராப்ளம்?
அப்பாவி சுப்பையா: தொலைக்காட்சியில வர்ற எந்த சீரியலுக்கும் அழ மாட்டேங்கிறாளே...டாக்டர்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.