நர்ஸைப் பார்த்து வாயைப் பிளந்தாயாமே...?
தேனி.எஸ்.மாரியப்பன்
டைரக்டர்: இந்தப் படத்தில உங்களுக்கு ஊமை கேரக்டர்...!
அப்பாவி சுப்பையா: அப்ப... நடிகைக்குக் கணவன்னு சொல்லுங்க...
*****
ஒருவர்: நீங்க வேலைக்காரிக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்தீங்களாமே...?
அப்பாவி சுப்பையா: ஆமாம். ஐ லவ் யூன்னு மட்டும் சொல்லிக் கொடுத்தேன்.
*****
ஒருவர்: உங்க மனைவி உங்களை அடிச்சாங்களாமே...எதுக்கு?
அப்பாவி சுப்பையா: மனைவியை அடக்குவது எப்படி?ன்னு புத்தகம் எழுதியதுக்குத்தான்...!
*****
ஒருவர்: நீங்க செத்தா சொர்க்கத்துக்குத்தான் போவேன்னு எப்படி சொல்றீங்க...?
அப்பாவி சுப்பையா: நான் பூலோகத்தில மூன்று மனைவிகளோட குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கேனே...
*****
மனைவி: நான் தான் உங்க மனைவி லதா பேசுறேன்... நான் பேசுறது கேட்குதா?
அப்பாவி சுப்பையா: இநான் சுப்பையாதான் பேசுறேன். நீ பேசுறது ஒண்ணும் கேட்கலயே...
*****
ஒருவர்: அந்த டாக்டர்கிட்ட ஆபரேசன் பண்ணிக்கறதுக்கு ஜாதகத்தைக் கொண்டு போறீங்களே...எதுக்கு?
அப்பாவி சுப்பையா: ஆபரேசன் பண்றதுக்கு ஜாதகத்தில என் ஆயுள் எப்படின்னு டாக்டர் பார்க்கனுமாம்...!
*****
ஆசிரியர்: உங்க பையன் சொன்ன பேச்சு எதையும் கேட்க மாட்டேங்கிறானே...?
அப்பாவி சுப்பையா: சின்ன வயசுல நானும் அப்படித்தான் இருந்தேன்...!
*****
மனைவி: ஒன்றுமே எழுதாத பரீட்சை பேப்பருக்கு பாஸ் மார்க் போட்டுட்டீங்களா...ஏன்?
அப்பாவி சுப்பையா: கவர்ச்சி நடிகை காந்தா உங்களுக்குத்தான்னு எழுதியிருந்தானே...!
*****
ஒருவர்: ஆஸ்பத்திரியிலே உங்க மனைவி இறந்திட்டான்னு சொன்னதும் ஏன் அலறினீங்க...?
அப்பாவி சுப்பையா: அவ கழுத்தில பத்து சவரன் நகை போட்டிருந்தாளே...!
*****
ஒருவர்: சொத்தைப் பல்லைப் பிடுங்கப் போன நீ அங்கயிருந்த நர்ஸைப் பார்த்து வாயைப் பிளந்தாயாமே...?
அப்பாவி சுப்பையா: அந்த சமயத்தில்தான் பல் டாக்டர் என் பல்லை எடுத்திட்டார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.