அது இருக்கட்டும் அலமேலு..!
தேனி.எஸ்.மாரியப்பன்
மனைவி: இன்னைக்குப் பேப்பர் பார்த்தீங்களா..? தீபாவளிப் பலகாரம் செய்யத் தெரியாத கணவன் விவாகரத்தாம்...!
அப்பாவி சுப்பையா: அது இருக்கட்டும் அலமேலு. இன்னிக்கு என்ன பலகாரம் செய்யனும்னு சொல்லு...!
*****
ஒருவர்: தலையில ஹெல்மெட் போட்டுக்கிட்டு நடந்து போறீங்களே...?
அப்பாவி சுப்பையா: தீபாவளி பட்டாசுக்கு பாதுகாப்பாய் இருக்கட்டுமேன்னுதான்.
*****
ஒருவர்: நீ யோகக்காரண்டா..! கல்யாணமான நாலு மாசத்தில தலைத் தீபாவளி வந்திடுச்சு...!
அப்பாவி சுப்பையா: அட போப்பா...! எனக்கு கல்யாணமான நாலு மாசத்தில குழந்தையே பிறந்திடுச்சு...!
*****
ஒருவர்: உங்க மனைவியைப் போலீஸ் பிடிச்சுட்டுப் போகுதே...ஏன்?
அப்பாவி சுப்பையா: அவ செஞ்ச தீபாவளி பலகாரத்தைச் சாப்பிட்ட ஒரு பிச்சைக்காரன் இறந்திட்டானாம்.
*****
ஒருவர்: அரசியல்வாதியோட பொண்ணைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டது தப்பாப் போச்சா...!
அப்பாவி சுப்பையா: ஆமாம். தலைத் தீபாவளிக்கு குண்டர்களை வச்சு மிரட்டி எதுவும் செய்யாமல் அனுப்பிட்டார்.!
*****
ஒருவர்: உன் மனைவி காணாமல் போனாலும் தலை தீபாவளி கொண்டாடிட்டியா...எப்படி?
அப்பாவி சுப்பையா: அவளோட தங்கையோட சேர்ந்துதான்.
*****
ஒருவர்: மன்னர் பரம்பரைன்னு சொல்லிக்கிட்டு இருந்த உங்க மாமனார் தீபாவளிக்கு என்ன செய்தார்...?
அப்பாவி சுப்பையா: தலைத் தீபாவளிக்கு போன என்னை "மாப்பிள்ளை வர்றார்...பராக்...பராக்..."ன்னு சொல்லி வரவேற்றார். அவ்வளவுதான்!
*****
ஒருவர்: என்னோட மனைவி இட்லி சுட்டா மல்லிகைப்பூவாட்டம் இருக்கும்...!
அப்பாவி சுப்பையா: அப்ப வடை சுட்டா நூலாட்டம் இருக்குமா?
*****
ஒருவர்: நம்ம தலைத் தீபாவளிக்கு எங்கப்பா வீட்டுக்குப் போக வேண்டாமுன்னு சொல்றீங்களே... ஏன்?
அப்பாவி சுப்பையா: என்னோட பொண்ணு தலை தீபாவளிக்கு இங்க வர்றாளாம்!
*****
ஒருவர்: உங்க பொண்ணுக்கு கல்யாணம் ஆகி மூணு மாசத்துக்குள்ள தலை தீபாவளி வந்திடுச்சா...?
அப்பாவி சுப்பையா: இல்லீங்க... மாப்பிள்ளை அனுப்பின விவாகரத்து நோட்டீசு வந்திடுச்சு...!
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.