இரு வீட்டார் அழைப்பு!
தேனி.எஸ்.மாரியப்பன்
ஒருவர்: உங்க வீட்டுக் கல்யாணப் பத்திரிகையில இரு வீட்டார் அழைப்புன்னு போட்டிருக்கீங்களே...?
அப்பாவி சுப்பையா: ஆமாம். என்னோட சின்னவீட்டையும் சேர்த்துத்தான்!
*****
ஒருவர்: மத்தவங்க கையை நம்பித்தான் நீங்க பிழைக்கிறீங்களா?
அப்பாவி சுப்பையா: ஆமாங்க. கைரேகை பலன் சொல்லிப் பிழைக்கிறேன்.
*****
ஒருவர்: ஜோதிடரைக் கூப்பிட்டு வந்து என்ன கேட்டீங்க?
அப்பாவி சுப்பையா: என்னோட ராசிக்கு சின்ன வீடு எந்தப் பக்கம் இருக்கனுமின்னுதான்.!
*****
ஒருவர்: நான் ஆபரேசன் செய்தால் பிழைத்துக் கொள்வீர்கள்?
அப்பாவி சுப்பையா: பகல் கனவெல்லாம் காணாதீங்க டாக்டர்.
*****
ஒருவர்: உங்க பையன் எட்டாவது படிக்கிறானே... குழந்தை இல்லைன்னு சொல்றீங்களே...?
அப்பாவி சுப்பையா: அவனுக்குப் பிறகு குழந்தை இல்லீங்க...
*****
ஒருவர்: சொர்க்கமும் நரகமும் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?
அப்பாவி சுப்பையா: என்னோட சின்ன வீடு, பெரிய வீடு மாதிரிதான்.
*****
போலீஸ்: கேசுக்காக இன்ஸ்பெக்டர் உங்களை வந்து பார்க்கச் சொன்னார்..?
அப்பாவி சுப்பையா: அது கேசுக்காக இல்ல; காசுக்காக.
*****
ஒருவர்: உங்களுக்கு இந்த ஆபரேசனை இரண்டு வருசத்துக்கு முன்னாலேயே செய்யனும்னு டாக்டர் சொன்னாராமே...
அப்பாவி சுப்பையா: ஆமாம் அவருக்குப் பண கஷ்டம் வரும் போதெல்லாம் ஆபரேசன் பண்ணனும்பாரு..!
*****
ஒருவர்: உங்க மனைவிக்கு கோபம் வந்தால் ஒன்னு, ரெண்டு, மூணுன்னு எண்ணுவாங்களாமே?
அப்பாவி சுப்பையா: ஆமாம். மூணு எண்ணுறதுக்குள்ள அந்த இடத்தை விட்டு நான் ஓடிடனும்!
*****
டாக்டர்: சீட்டு எழுதி எக்ஸ்ரே எடுக்க அனுப்பியும் ஏன் எடுக்கல?
அப்பாவி சுப்பையா: அந்தச் சீட்டை ஜெராக்ஸ்தான் எடுக்க முடியுமாம். எக்ஸ்ரே எடுக்க முடியாதாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.