அனுபவமுள்ள நர்ஸ்கள் தேவை!
தேனி.எஸ்.மாரியப்பன்
ஒருவர்: நீங்க தோல் டாக்டர்தானே...! லெதர் டாக்டருன்னு எழுதிப் போட்டிருக்கீங்களே...?
அப்பாவி சுப்பையா: ஆமாம். லெதருன்னா தோலுன்னு உங்களுக்குத் தெரியாதா...!
*****
ஒருவர்: உங்க மாமனாருக்குக் காலையில என்ன டிபன் தருவீங்க?
அப்பாவி சுப்பையா: வழக்கம் போல தண்டச்சோறுதான்.
*****
ஒருவர்: அந்த ராப்பிச்சைக்காரனை ஏன் திட்டுறீங்க?
அப்பாவி சுப்பையா: என்கிட்ட குவார்ட்டர் பாட்டில் இருக்கு. சைடு டிஸ் வேணுமின்னு கேட்கிறானே!
*****
ஒருவர்: உங்களுக்குப் பிடிக்காதவங்க வீட்டுக்கு மாறுவேடத்தில் போனீங்களாமே?
அப்பாவி சுப்பையா: அவங்க எனக்குப் பிடிச்ச அசைவ உணவு பார்ட்டி வைத்தாங்களே...!
*****
ஒருவர்: உங்களுக்குப் போதை ஏறிட்டா கண்டபடி பேசுவீங்களாமே?
அப்பாவி சுப்பையா: ஆமாம். என் மனைவியைக் கண்ணே, மணியேன்னு கொஞ்சுவேன்.
*****
ஒருவர்: பையனுக்குப் பொண்ணு பார்க்கப் போனீங்களே? என்ன கேட்டீங்க?
அப்பாவி சுப்பையா: பொண்ணுக்கு வாய் நீளம் எவ்வளவு? கை நீளம் எவ்வளவு? ன்னுதான்.
*****
ஒருவர்: என் மனைவி எள்ளுன்னா எண்ணெய்யா வந்து நிற்பாள்...!
அப்பாவி சுப்பையா: அவங்களுக்குக் காது செவிடா?
*****
ஒருவர்: உங்க மனைவி கல் நெஞ்சக்காரின்னு எப்படி சொல்றீங்க...?
அப்பாவி சுப்பையா: டி.வி சீரியல் எவ்வளவு சீரியஸா இருந்தாலும் அழ மாட்டாளே...!
*****
ஒருவர்: உங்களுக்கு ரெண்டு நாளாத் தூக்கமில்லேன்னு டாக்டர்கிட்ட போனீங்களே? என்ன சொன்னார்?
அப்பாவி சுப்பையா: அவருக்கு ரெண்டு நாளா ஒரு பேசண்ட் கூட இல்லையாம். சத்தம் போட்டார்.
*****
ஒருவர்: உங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுத்திருக்காங்களே? அடுத்து என்ன பண்ணப் போறீங்க?
அப்பாவி சுப்பையா: "அனுபவமுள்ள நர்ஸ்கள் தேவை" ன்னு விளம்பரம் தர வேண்டியதுதான்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.