பிழைக்கத் தெரிந்த பாட்டி
தேனி.எஸ்.மாரியப்பன்
ஒருவர்: எங்கப்பாவை ஆஸ்பிடலில பார்க்க வர்றேன்னு சொன்னீங்களே...ஏன் வரலை?
அப்பாவி சுப்பையா: முடிஞ்சா வர்றேன்னு சொன்னேன். அதான் முடியலையே..!
*****
ஒருவர்: உனக்குப் பன்றிக் காய்ச்சல்ன்னு டாக்டர்கிட்ட போனியே... என்ன சொன்னார்?
அப்பாவி சுப்பையா: அவருக்கும் பன்றிக் காய்ச்சலாம். முகமூடி போட்டு உட்கார்ந்திருந்தார்.
*****
தாய்: ஏண்டா, உன் மனைவியைத் தலையில தூக்கி வச்சு ஆடுறியாமே...?
அப்பாவி சுப்பையா: அதெப்படிம்மா முடியும் அவளோட எடை எண்பது கிலோவாச்சே...!
*****
டாக்டர்: நர்ஸை சகோதரின்னு கூப்பிடுறீங்களே... ஏன்?
அப்பாவி சுப்பையா: எனக்கு தமிழ் பற்று அதிகம் மருத்துவர் அய்யா...!
*****
ஒருவர்: உங்களுக்குப் போதை ஏறிட்டா கண்டபடி பேசுவீங்களாமே?
அப்பாவி சுப்பையா: ஆமாம். என் மனைவியைக் கண்ணே, மணியேன்னு கொஞ்சுவேன்.
*****
ஒருவர்: உங்க பாட்டி பிழைக்கத் தெரிந்தவருன்னு எப்படி சொல்றீங்க...?
அப்பாவி சுப்பையா: உயிர் போனாலும் டாக்டர் கிட்ட வரமாட்டேன்னு அடம் பிடிக்கிறாங்களே...!
*****
பத்திரிகை ஆசிரியர்: வாசகர்களுக்கு பத்திரிகையை டேஸ்ட்டாக் கொடுக்க என்ன செய்யலாம்?
அப்பாவி சுப்பையா: பத்திரிகையோட அட்டையில் தேன் தடவிக் கொடுக்கலாம்.
*****
நீதிபதி: எதிரியை ஆள் வைத்துக் கொன்றாயாமே...?
அப்பாவி சுப்பையா: ஆமாங்க... எஜமான் எனக்கு கொலை செய்றதில அனுபவமில்லையே..!
*****
ஒருவர்: நகைக்கடைக்காரர் வீட்டில் பொண்ணுக்கு ஒரு கிலோ தங்கம் போடுறதா சொல்லி 900 கிராம்தான் போட்டிருக்காங்களா. ஏன்?
அப்பாவி சுப்பையா: செய்கூலி, சேதாரமுன்னு 100 கிராம் குறைச்சிட்டாங்க.
*****
ஒருவர்: டாக்டர்கிட்ட தனியா பேசனுமின்னு சொன்னீங்களே... என்ன சொன்னீங்க?
அப்பாவி சுப்பையா: நானும் நர்ஸ் பிரியாவும் லவ் பண்றோம். கண்டுக்காதீங்கன்னு சொன்னேன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.