முதலிரவில் லைட்டை அணைப்பது ஏன்?
தேனி.எஸ்.மாரியப்பன்
ஒருவர்: உங்க மனைவி எதுக்கு உங்களை அடித்தார்கள்...?
அப்பாவி சுப்பையா: பொறுத்தது போதும்... என்பதற்குப் பதிலா பெருத்தது போதுமுன்னு வாய் தவறிச் சொல்லிட்டேன்..!
*****
ஒருவர்: இருமல் நிற்க மாட்டேங்குதுங்க...?
அப்பாவி சுப்பையா: அப்படின்னா அங்க உட்கார வையுங்க...! இல்ல படுக்க வையுங்க...!
*****
பியூன்: சார் மணி ஆறாகுது. வீட்டுக்குப் போகலையா...?
அப்பாவி சுப்பையா: இன்னிக்கு வருமானம் ஒன்னும் இல்ல... வீட்டுக்குப் போனால் மானம் போகும்...!
*****
டாக்டர்: நான் இன்னும் உங்களுக்கு ஊசியே போடலை. அதற்குள் இப்படி கத்துகிறீர்களே?
அப்பாவி சுப்பையா: உங்க நர்சைப் பார்த்ததும் எனக்கு என் மனைவி ஞாபகம் வந்துட்டுது டாக்டர்...!
*****
நீதிபதி: மூன்று பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டீர்களாமே...?
அப்பாவி சுப்பையா: ஏமாற்றி திருமணம் செய்யலீங்க... நான் விரும்பித்தான் திருமணம் செய்துக்கிட்டேன்!
*****
தந்தை: எல்லாப் பாடத்திலயும் நூறு மார்க் வாங்கிட்டியா... ஆச்சர்யமாயிருக்கே...?
அப்பாவி சுப்பையா: ஆமாம்ப்பா... எல்லாப் பாடத்துக்கும் சேர்த்து வாங்கியிருக்கேன்.
*****
போலீஸ்: என்னய்யா அநியாயம். சொந்த வீட்டுக்கே வெடிகுண்டு வைத்திருக்கிறாயே?
அப்பாவி சுப்பையா: என் மாமியாரும், மாமனாரும் வந்து ஆறு மாதம் ஆகுது. வேற என்ன செய்ய?
*****
ஒருவர்: போலி டாக்டருன்னு தெரிந்தும் அவரிடம் போய் வைத்தியம் பார்க்கறீங்களே?
அப்பாவி சுப்பையா: அவருகிட்டதான் பீஸ் குறைவா இருக்கு!
*****
ஒருவர்: முதலிரவு அறைக்குள்ள நுழைந்ததும் லைட்டை எதுக்கு அணைக்கிறாங்கன்னு தெரியுமா?
அப்பாவி சுப்பையா: மாப்பிள்ளை பயந்து ஓடிவிடக் கூடாதுன்னுதான்.
*****
ஒருவர்:நம்ம குப்புசாமி திருமணம் செய்துக்கற பொண்ணு பேரு அதிர்ஷ்டமாம்...
அப்பாவி சுப்பையா: அப்ப குப்புசாமியை அதிர்ஷ்டம் அடிக்கப் போகுதுன்னு சொல்லு...!

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.