தேள் கொட்டினா வலிக்குமே...நீங்க இப்படி சிரிக்கிறீங்க?
தேனி.எஸ்.மாரியப்பன்
ஒருவர்: பத்துப் பாத்திரம் தேய்க்க ஆள் போட்டீங்களே... என்ன ஆச்சு?
அப்பாவி சுப்பையா: கூட ஒரு பாத்திரம் தேய்க்கச் சொன்னேன் முடியாதுன்னு போயிட்டா...!
*****
ஒருவர்: தேள் கொட்டினால் பயங்கரமா வலி இருக்கும்னு சொல்வாங்க... நீங்க இப்படி சிரிக்கிறீங்களே...?
அப்பாவி சுப்பையா: தேள் கொட்டினது என்னோட மனைவிக்கு...!
*****
மனைவி: புல்லாங்குழல் வாங்கப் போயிட்டு திரும்ப வந்துட்டீங்களே...ஏன்?
அப்பாவி சுப்பையா: முழுவதும் ஓட்டையா இருக்கிறதக் கொடுத்தான் வேணாமுன்னு வந்துட்டேன்.
*****
ஒருவர்: டி.வி.பார்க்கறது பெண்களுக்கு சகஜம்தானே... இதையேன் பெரிசா சொல்றீங்க...?
அப்பாவி சுப்பையா: அட நீங்க ஒன்னு கரண்ட் இல்லைன்னாலும் டி.வியைப் பார்த்துக்கிட்டு உக்கார்ந்திருக்காங்க!
*****
மனைவி: புதுச்செருப்பை பீரோவில வச்சுப் பூட்டுறீங்களே...ஏன்?
அப்பாவி சுப்பையா: புதுச்செருப்பு கடிக்குமுன்னு சொன்னாங்க... பழசாகட்டுமுன்னு பீரோவில வச்சேன்.
*****
ஒருவர்: பரிட்சையில் கேட்காத கேள்விக்கெல்லாம் பதில் எழுதினீங்களாமே...?
அப்பாவி சுப்பையா: வேறென்ன செய்றது? கொண்டு போன பிட்டில இருக்கிறதைத்தானே எழுத முடியும்.
*****
ஒருவர்: எனக்குத் திருமணமாகாததால நாட்டுக்குச் சேவை செய்யலாமுன்னு அரசியலுக்கு வந்தேன்...
அப்பாவி சுப்பையா: எனக்குத் திருமணம் ஆயிடுச்சு... மனசு வெறுத்து அரசியலுக்கு வந்துட்டேன்.
*****
ஒருவர்: அந்த டாக்டர் உங்களை ஆறுமாசம் தங்கி வைத்தியம் பார்க்கச் சொல்றாரே...ஏன்?
அப்பாவி சுப்பையா: என்னோட சொத்து மதிப்பு இருபது லட்சமுன்னு சொன்னேன்.
*****
ஒருவர்: மொபைல் அது இதுன்னு வந்துட்டதால இப்பவல்லாம் கல்யாணத்துக்கு வாழ்த்து தந்தி வர்றது இல்லைங்க...
அப்பாவி சுப்பையா: அங்க பாருங்க... சாப்பிடுற இடத்தில... வாழ்த்த ஒரே தொந்திகளா வந்திருக்காங்க...!
*****
ஒருவர்: உங்க வீட்டில மாமியார் மருமகள் வித்தியாசமே கிடையாதாமே...?
அப்பாவி சுப்பையா: ஆமாங்க இரண்டு பேரும் ஒரே பல்செட்டைத்தான் உபயோகிக்கிறாங்க...!
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.