டாக்டரிடம் வேலை பார்த்த சர்ட்டிபிகேட் இருக்கா...?
தேனி.எஸ்.மாரியப்பன்
தியேட்டர் ஊழியர்: யோவ், படம் முடிஞ்சு ஒரு மணி நேரமாகுது. இன்னும் வெளியேறலயா...?
அப்பாவி சுப்பையா: நான் படம் போட்டபோது தூங்கிட்டேன். இப்ப எனக்கு படம் போட்டுக் காட்டுங்க...!
*****
ஒருவர்: வாய் பேச முடியலைன்னு கால்நடை டாக்டர்கிட்ட போனியா...ஏன்?
அப்பாவி சுப்பையா: (சைகையாக) வாயில்லா ஜீவன்களுக்கு கால்நடை மருத்துவரைத்தானே பார்க்கனும்.
*****
ஒருவர்: வரிசையில் வந்த உங்களை நிறுத்தினவரிடம் 72 கிலோன்னு சொன்னீங்களே எதுக்கு?
அப்பாவி சுப்பையா: அவர் என்னை நிறுத்துவதற்கு முன்னால வெயிட் பிளீஸ்..ன்னு சொன்னாரே!
*****
ஒருவர்: உங்க மனைவியோட பெயர் சத்தான லட்சுமியா?
அப்பாவி சுப்பையா: முதலில் சந்தான லட்சுமியாத்தான் இருந்தாள். இப்போ அவ குண்டாயிட்டதால சத்தான லட்சுமின்னு மாத்திட்டேன்.
*****
ஒருவர்: ஜெயிலில் தொழில் கற்றுத் தருவாங்களாமே... நீங்க ஜெயிலில் என்ன கத்துக்கிட்டீங்க?
அப்பாவி சுப்பையா: குற்றத்திலிருந்து எப்படித் தப்பிக்கறதுன்னு கத்துக்கிட்டேன்.
*****
ஒருவர்: உங்க மனைவிக்கு துணி பைத்தியமா? நிறைய சேலை எடுப்பாங்களோ...?
அப்பாவி சுப்பையா: இல்லை நிறைய சேலையைக் கிழிப்பா...!
*****
ஒருவர்: வக்கீலுக்குப் பொண்ணைக் கொடுத்தீங்களே... இப்ப எப்படியிருக்கிறார்?
அப்பாவி சுப்பையா: என் பொண்ணோட பங்கை இப்பவே பிரிச்சுக் கொடுங்கன்னு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
*****
ஒருவர்: உங்க கடையில மருந்து வாங்கிச் சாப்பிட்டவங்க திரும்பி வர மாட்டாங்களா? ஏன்?
அப்பாவி சுப்பையா: அந்த மருந்திலேயே அவங்க போய்ச் சேர்ந்திடுவாங்களே..!
*****
ஒருவர்: டாக்டரோட வீட்டில முன்னாடி வேலை பார்த்தேன்னு சொல்றீங்களே...? சர்ட்டிபிகேட் ஏதுமிருக்கா?
அப்பாவி சுப்பையா: அவரோட டெதஸ்கோப்பே இருக்கு சார்!!
*****
ஒருவர்: தூங்கும்போது கூட கையைக் கட்டிக்கிட்டுத் தூங்குறீங்களே...?
அப்பாவி சுப்பையா: பக்கத்தில என் மனைவி படுத்திருக்கிற மாதிரியே பழகிப் போச்சு...!
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.