மனைவிக்கு ஊசி போடும் போது நீங்க ஏன் கத்துறீங்க...?
தேனி.எஸ்.மாரியப்பன்
ஒருவர்: உங்க மனைவி காணாமல் போய் ஒரு மாசம் ஆகியும் வேணுமின்னுதான் தேடாமல் இருந்தீங்களா...?
அப்பாவி சுப்பையா: இல்லீங்க....வேணாமுன்னுதான் தேடாமல் இருந்தேன்.
*****
ஒருவர்: உங்க வகுப்பில அரசியல்வாதியோட பையனை எப்படி சமாளிக்கிறீங்க...?
அப்பாவி சுப்பையா: அவனுக்குத்தான் என்னோட சேரைக் கொடுத்து உட்காரச் சொல்லிடுறேனே...!
*****
ஒருவர்: உங்க கல்யாணத்துக்குப் பிறகு யோகம் அடிக்குமுன்னு சொன்னாங்களே...?
அப்பாவி சுப்பையா: ஆமாங்க... மனைவியா வந்தவ பின்னி எடுக்கிறா...!
*****
ஒருவர்: உங்களைத் தொண்டர்களெல்லாம் உரம் ஏறிய தலைவர்ன்னு சொல்றாங்களே...?
அப்பாவி சுப்பையா: ஆமாம் என் படம் போட்ட வால் போஸ்டரிலதான் அதிகமா சானி அடிச்சிருக்காங்க....!
*****
ஒருவர்: உங்க மனைவிக்கு ஊசி போடும் போது நீங்க ஏன் கத்துறீங்க...?
அப்பாவி சுப்பையா: எனக்கு ஊசி போடும் போது வேடிக்கை பார்த்துட்டு சும்மா இருந்தீங்கன்னு வீட்டுக்குப் போனதும் அவ கத்துவாளே...!
*****
ஒருவர்: உங்க மனைவி கோவிச்சுக்கிட்டு சாப்பிடாம போயிட்டாங்களா...?
அப்பாவி சுப்பையா: என் மனைவி கோவிச்சுட்டு சமைக்காமல்தான் போயிட்டாங்க...!
*****
ஒருவர்: சத்யசோதனை படிச்சீங்களே... எந்த இடத்தில உங்களுக்குக் கண்ணீர் வந்தது...?
அப்பாவி சுப்பையா: எங்க வீட்டு மாடியிலதான்...!
*****
ஒருவர்: உங்க மனைவி கையில் ஒரு மூடியோட இருக்காங்களே...?
அப்பாவி சுப்பையா: ஆமாங்க...ஏதோ ஒரு விஷயத்தை மூடி மறைக்கப் போறா...!
*****
ஒருவர்: உங்களுக்கு நடக்கிற ஆபரேசனில நீங்க பிழைக்கனுமுன்னு டாக்டரே பிரார்த்தனை பண்றாரே...
அப்பாவி சுப்பையா: அப்புறம் அவரிடம் வாங்கின ஒரு லட்சம் ரூபாயைத் தர வேண்டாமா?
*****
ஒருவர்: இந்தக் கண்ணாடியைப் போட்டுக்கங்க...நல்லா படிக்கலாம்.
அப்பாவி சுப்பையா: பள்ளிக்கூடமே போகாதவங்க கூட படிக்கலாமா டாக்டர்.
*****
ஒருவர்: இவரை நடத்தை கெட்டவர்ன்னு சொல்றீங்களே...?
அப்பாவி சுப்பையா: ஆமாம் அவர் காலை விந்தி விந்தி நடப்பார்
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.