அடிக்கடி ஏப்பம் விடுவீங்களே...எப்படி நின்றது?
தேனி.எஸ்.மாரியப்பன்
ஒருவர்: வீட்டுக்குள்ளே மணலைக் கொட்டி வைத்திருக்கீங்களே....?
அப்பாவி சுப்பையா: ஆமாம். என் மனைவிக்குக் கோபம் வந்தால் மண்ணை வாரித் தூற்றுவாள். அதுக்குத்தான்.
*****
ஒருவர்: உன் மாமனார் சொத்தைப் பிரிச்சதுல உனக்கு என்ன பங்கு கிடைத்தது?
அப்பாவி சுப்பையா: இரண்டு லட்சம் கடன் வந்தது.
*****
ஒருவர்: உங்க கோழியைக் காணோமுன்னு சொல்லிக்கிட்டிருந்தீங்களே...கிடைச்சதா?
அப்பாவி சுப்பையா: ரெண்டு பிளேட் கோழிப் பிரியாணி கிடைச்சது.
*****
ஒருவர்: டாக்டர் உங்களைப் பூரியே சாப்பிடக் கூடாதுன்னு சொல்லிட்டாரா?
அப்பாவி சுப்பையா: ஆமாம் காற்றுள்ள பொருள் சாப்பிட்டா ஏப்பம் வருமாம்.
*****
ஒருவர்: தூங்கும்போது கூட கையைக் கட்டிக்கிட்டுத் தூங்குவீங்களாமே...?
அப்பாவி சுப்பையா: அப்புறம் என் மனைவி முன்னால எப்படித் தூங்கறது?
*****
ஒருவர்: உங்களுக்கும் உங்க காதலிக்கும் ஒரே நேரத்தில திருமணமா? இதிலென்ன ஆச்சரியம்?
அப்பாவி சுப்பையா: எனக்கு மதுரையிலும் அவளுக்கு திருச்சியிலும் திருமணம்.
*****
ஒருவர்: உங்கப்பா வீட்டுக்குள்ளே சரிசரின்னு மட்டும் சொல்லிக்கிட்டிருக்காரே?
அப்பாவி சுப்பையா: ஆமாம். அவர் என் அம்மாவிடம் பேசிக்கிட்டிருக்கார்.
*****
ஒருவர்: பட்டப்பகலில் வீடு புகுந்து திருடியிருக்காயே...எப்படி?
அப்பாவி சுப்பையா: மாலை ஆறு மணிக்கு மேல் எனக்கு கண் தெரியாதே...!
*****
ஒருவர்: உங்களுக்கு சங்கீத ஞானம் இருந்ததால அமைச்சர் பதவி கிடைத்ததா?
அப்பாவி சுப்பையா: ஆமாம்! எனக்கு ஜால்ரா அடிக்கத் தெரியும்.
*****
ஒருவர்: அடிக்கடி ஏப்பம் விடுவீங்களே...எப்படி நின்றது?
அப்பாவி சுப்பையா: பைனான்ஸ் கம்பெனி ஆரம்பிச்சுட்டேனே...!
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.