போலி டாக்டர்னு தெரிஞ்சும் வைத்தியம் பண்றீங்களே...?
தேனி.எஸ்.மாரியப்பன்
ஒருவர்: சாந்தி முகூர்த்தத்தை ஒரு மாதம் தள்ளி வைத்து விட்டார்களா... ஏன்...?
அப்பாவி சுப்பையா: கல்யாணம் ஒரு மாதம் தள்ளி வைத்து விட்டார்களே...!
*****
ஒருவர்: உங்க மனைவி பொய் சொல்றாங்கன்னு சொல்றீங்களே...எப்படி?
அப்பாவி சுப்பையா: அவ என்னைப் பெரிய அறிவாளின்னு சொல்றாளே...!
*****
ஒருவர்: இட்லி பார்சல் வாங்கிட்டு வந்து அந்த பேப்பரையும் சேர்த்துச் சாப்பிட்டு விடுவீர்களாமே...?
அப்பாவி சுப்பையா: ஆமாம், பேப்பர் ரோஸ்ட்டிலதான் இட்லியை பார்சல் பண்ணி வாங்கி வருவேன்.
*****
ஒருவர்: சுருட்டு கம்பெனி நடத்தினீர்களே வியாபாரம் எப்படி?
அப்பாவி சுப்பையா: ஆபிஸில இருந்தவங்க பணத்தைச் சுருட்டிட்டு ஓடிட்டாங்க...!
*****
ஒருவர்: பேரத் தேர்வில உங்க பையனுக்கு வேலை கிடைக்காமல் போயிடுச்சா..?
அப்பாவி சுப்பையா: ஆமாம். அவங்க ஐந்து லட்சம் கேட்டாங்க...நான் இரண்டு லட்சம் தர்ரேன்னு சொன்னேன்.
*****
ஒருவர்: போலி டாக்டர்ன்னு தெரிஞ்சும் அவரிடம் வைத்தியம் செய்யனும்னு போறீங்களே...?
அப்பாவி சுப்பையா: அவர்தான் பயந்து பயந்து நல்ல முறையில் வைத்தியம் பண்றார்.
*****
ஒருவர்: கல்யாணமே வேணாமுன்னு இரும்பு மனசா இருந்த நீங்க பெண்ணைப் பார்த்தவுடனே பிடிச்சிருக்குன்னு சொல்லீட்டீங்களாமே...?
அப்பாவி சுப்பையா: ஆமாம், பெண்ணோட காந்தப் பார்வை இந்த இரும்பு மனசை ஈர்த்திடுச்சு...
*****
ஒருவர்: நீங்கதான் குடும்பக் கட்டுப்பாடு பண்ணிவிட்டீர்களே! அப்புறம் எப்படி உங்க மனைவி மூணு மாத கர்ப்பமாயிருக்கிறாள்னு சொல்றீங்க...?
அப்பாவி சுப்பையா: அவ குடும்பக் கட்டுப்பாடு பண்ணிக்கலையே...!
*****
ஒருவர்: உங்க கட்சியோட பொதுக்குழுவைக் கூட்ட ஒரு லட்சம் செலவுன்னு சொல்றீங்களே...
அப்பாவி சுப்பையா: ஆமாம்! ஆயிரம் துடைப்பம் வாங்கியிருக்கேன்...!
*****
ஒருவர்: இந்த டாக்டர் வெளிநாட்டில் பயிற்சி பெற்று வந்திருக்கிறார்...
அப்பாவி சுப்பையா: எப்படியெல்லாம் நோயாளிகளிடம் பணம் கறக்கலாமுன்னுதானே...!
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.