மதுரையில முக்கிய பிரமுகரைக் கைது பண்ணிட்டாங்க...?
தேனி.எஸ்.மாரியப்பன்
ஒருவர்: உங்க அப்பா மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டாரே...டாக்டர் என்ன சொன்னார்?
அப்பாவி சுப்பையா: சொந்தபந்தங்களுக்குச் சொல்லிவிடச் சொன்னார்...!
*****
ஒருவர்: குழந்தை வரம் கேட்டு உங்க மனைவி சாமியார்கிட்டே போனாங்களே... குழந்தை பாக்கியம் கிடைத்ததா?
அப்பாவி சுப்பையா: குறுந்தாடியுடன் குழந்தை பிறந்திருக்கு.
*****
ஒருவர்: கொசு கடிச்சு உங்க பல் உடைந்ததா? எப்படி?
அப்பாவி சுப்பையா: என் கன்னத்திலே கடிச்ச கொசுவை என்னோட மனைவி அடிச்சுட்டாளே...!
*****
ஒருவர்: சொத்தைப் பல்லைப் பிடுங்க டாக்டர்கிட்டே போனீங்களே, என்ன ஆச்சு?
அப்பாவி சுப்பையா: என்னோட சொத்தையும் சேர்த்துப் பிடுங்கிட்டார்.
*****
ஒருவர்: பொண்ணு பார்க்க வந்தவங்களைப் போட்டோ பிடிக்கிறீங்களே...ஏன்?
அப்பாவி சுப்பையா: இவங்களே...வாரத்திற்கு ஒரு முறை வந்து டிபன் சாப்பிட்டு போற மாதிரி தெரியுது...!
*****
ஒருவர்: உங்க மாமனாருக்கு ஹார்ட் அட்டாக்குன்னதும் நீங்க அதிர்ச்சியாயிட்டீங்களாமே...?
அப்பாவி சுப்பையா: ஆமாங்க. அது இன்ப அதிர்ச்சி!
*****
ஒருவர்: அதோ போறவர் தைல வியாபாரம் பண்ணுகிறார்.
அப்பாவி சுப்பையா: மாசி, பங்குனி, மற்ற மாதங்களெல்லாம் என்ன பண்ணுவார்?
*****
ஒருவர்: பேனாவை வைத்தே ஒருத்தரைக் குத்திக் கொலை பண்ணிட்டீங்களாமே?
அப்பாவி சுப்பையா: கத்தி முனையை விட பேனா முனை சக்தி வாய்ந்ததுன்னு சொன்னாங்க...சரியான்னு பார்த்தேன்.
*****
ஒருவர்: மதுரையில முக்கிய பிரமுகரைக் கைது பண்ணிட்டாங்க...
அப்பாவி சுப்பையா: அநியாயமா இருக்கே! அந்த ஊர்ல முக்கினாக் கூடக் கைது பண்ணுவாங்களா?
*****
ஒருவர்: பல் டாக்டர்கிட்டே போன உங்க மனைவியை ஏன் அடிச்சீங்க...?
அப்பாவி சுப்பையா: ஆமாம். பல்லைப் பிடுங்கறேன்னு அந்த டாக்டர்கிட்ட போய் பல்லைக் காண்பிச்சுக்கிட்டிருந்தா...
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.