அந்தக் குடிகாரப் பேஷண்டை எப்படி சமாளிச்சீங்க?
தேனி.எஸ்.மாரியப்பன்
ஒருவர்: டாக்டர்கிட்ட சம்பளம் கூடுதலாக் கேட்டீங்களே... என்ன கொடுத்தார்?
அப்பாவி சுப்பையா: ஒரு மாசம் சஸ்பெண்ட் கொடுத்தார்.
*****
ஒருவர்: உங்க மாமனாரை அடிக்கடி வீட்டுக்குக் கூப்பிட்டுப் போறீங்களே...ஏன்?
அப்பாவி சுப்பையா: வீட்டில கஷ்டமான வேலையிருந்தா ஒத்தாசையாயிருக்குமே.
*****
ஒருவர்: உங்க மண்டை எப்படி உடைஞ்சது?
அப்பாவி சுப்பையா: நான் இறந்துட்டதா என் பையன்கள் கனவு கண்டு சொத்துத் தகராறில் மண்டையை உடைச்சுட்டாங்க...
*****
ஒருவர்: உங்க வீட்டில எல்லா அதிகாரமும் உங்க கையிலதான் வச்சிருக்கீங்களாமே?
அப்பாவி சுப்பையா: ஆமாம்! பிச்சைக்காரனுக்கு இல்லன்னு சொல்றதைக் கூட நான்தான் போய்ச் சொல்லனும்.
*****
ஒருவர்: அந்தக் குடிகாரப் பேஷண்டை எப்படி சமாளிச்சீங்க?
அப்பாவி சுப்பையா: குளுக்கோஸ் பாட்டிலில் குவார்ட்டர் சரக்கும் சேர்த்து ஏற்றி இருக்குன்னு சொன்னேன்.
*****
ஒருவர்: உங்க மனைவி மீது அதிகமான அன்பு காட்டுவீங்களாமே...?
அப்பாவி சுப்பையா: ஆமாங்க. அது இன்ப அதிர்ச்சி.!
*****
ஒருவர்: அந்தப் பொண்ணிடம் நகையைக் கேட்டுக் கழற்றிக் கொடுத்தும் வேணாமுன்னு சொல்லிட்டீங்களே..?
அப்பாவி சுப்பையா: ஆமாம்! கேட்டவுடனே கொடுத்தால் அது கவரிங் நகைன்னு எனக்குத் தெரியாதா?
*****
ஒருவர்: உங்களால முடியாத காரியத்தைச் செய்து தோற்றுப் போயிட்டீங்களாமே...?
அப்பாவி சுப்பையா: ஆமாம் டாக்டர். இரண்டு தடவை தற்கொலைக்கு முயற்சி பண்ணித் தோற்றுப் போயிட்டேன்...!
*****
ஒருவர்: அரசியல்வாதிக்குப் பொண்ணு கொடுத்து வீட்டோட வச்சிருக்கீங்களே... எப்படி இருக்கிறார்?
அப்பாவி சுப்பையா: சின்னச்சின்னப் பிரச்சனைக்கெல்லாம் வீட்டிலிருந்து வெளிநடப்பு செய்றார்.
*****
ஒருவர்: உங்க காதலியைப் பீச்சுக்கு வரச்சொல்லிட்டு நீங்க போகாம இருக்கீங்களே...?
அப்பாவி சுப்பையா: ஆமாம். டீவியில சுனாமி வருமுன்னு சொல்லியிருக்காங்களே...!
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.