என் கொழுந்தியா பார்த்துக்கிட்டா...!
தேனி.எஸ்.மாரியப்பன்
ஒருவர்: பொண்ணு பார்க்கப் போன இடத்துல உன் அம்மாவை அங்கேயே விட்டுட்டு வந்துட்டாயாமே?
அப்பாவி சுப்பையா: பொண்ணு கூட சண்டை போட்டு ஒரு முடிவுக்கு வரட்டும்னுதான்!
*****
ஒருவர்: அந்த டாக்டர் உங்களுக்குக் கட்டாயம் ஆபரேசன் பண்ணனும்னு சொல்றாரே...?
அப்பாவி சுப்பையா: அவங்க ஆஸ்பத்திரியில் ஆறுமாசமா யாருக்கும் சம்பளம் கொடுக்கலியாம்!
*****
ஒருவர்: உங்க மனைவியை விவாகரத்து பண்ணிய பிறகும் அவங்க ளோட இருக்கீங்களே...?
அப்பாவி சுப்பையா: மாற்று ஏற்பாடு பண்ணும் வரை உடன் இருக்கச் சொல்லியிருக்காள்!
*****
டாக்டர்: நேற்றுதானே உங்களுக்கு மூணு நாளைக்கு மருந்து கொடுத்தேன்...?
அப்பாவி சுப்பையா: டாக்டர் நீங்க கொடுத்த மருந்து இனிப்பாயிருக்குன்னு அப்படியே சாப்பிட்டுட்டேன்!
*****
ஒருவர்: உன் மனைவி கடல் அலை போல இருக்கான்னு சொன்னியே...இப்ப எப்படி இருக்காள்..?
அப்பாவி சுப்பையா: அடிக்கடி சுனாமியா மாறிவிடுகிறாள்!
*****
ஒருவர்: காசிக்குப் போனால் எதையாவது விட்டுட்டு வரனும்னு சொல்வாங்களே... நீங்க எதை விட்டீங்க?
அப்பாவி சுப்பையா: என்னோட மாமியாரை...!
*****
ஒருவர்: உங்க மனைவி காணாமல் போய் மூணு மாசம் ஆகிறதே...இதுவரை என்ன செய்தீங்க...?
அப்பாவி சுப்பையா: எந்தக் குறையும் இல்லாமல் என் கொழுந்தியா பார்த்துக்கிட்டா...!
*****
ஒருவர்: கூட்டணியில உங்க கட்சிக்கு அறுபது இடம் கொடுத்தும் வருத்தப்படுறீங்களே...?
அப்பாவி சுப்பையா: எங்க கட்சியிலே இருக்கிறதே முப்பது பேர்தான்!
*****
ஒருவர்: உங்க மனைவி பச்சக் குழந்தை மாதிரின்னு எப்படி சொல்றீங்க...?
அப்பாவி சுப்பையா: இடுப்பில தூக்கி வச்சு சோறு ஊட்டச் சொல்றாளே!
*****
ஒருவர்: நடுராத்திரியில எழுந்து சுடுகாட்டுக்குப் போனீங்களாமே...எதுக்கு?
அப்பாவி சுப்பையா: டாக்டர் என்னை ஆவி பிடிக்கச் சொன்னார். அதான்!
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|