இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Identification
அடையாளம்

ஹென்றி பவர் ஐயர்

பேராசிரியர் எ. சிட்னி சுதந்திரன்


சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஆசியா கண்டத்து மொழிகளுள் தமிழில் தான் முதன் முதலில் கிறிஸ்தவ வேதாகமம் மொழி பெயர்க்கப்பட்டது. இதனைச் செய்த பெருமை சீகன்பால்க் ஐயரைச் சாரும். அதன்பின்பு, தமிழகத்தில், எஸ்பிஜி (SPG) , எல்எம்எஸ் (LMS), சிஎம்எஸ் (CMS), அமெரிக்கன் மிஷன் (AM), தனி சபை (Free Church), என பல புரோட்டஸ்தாந்து கிறிஸ்தவ சபைகள் தோன்றின. அதுபோல அநேக தமிழ் கிறிஸ்தவ வேதாகம மொழிபெயர்ப்புகளும் தோன்றின. அவைகள் சீகன்பால்க் மொழிபெயர்ப்பு, ‘பப்ரிசியுசின் மொழிபெயர்ப்பு’, ‘இரேனியுஸ் மொழிபெயர்ப்பு’, ‘பெர்சிவல்’, அல்லது ‘பரீட்சை மொழி பெயர்ப்பு’ என்பனவாகும்.

சீகன்பால்க் மொழிபெயர்ப்பு வழக்கொழிந்து மறக்கப்பட்டுப் போனதாலும், பப்ரிசியுசின் மொழி பெயர்ப்பிலும், இரேனியுஸ் மொழி பெயர்ப்பிலும் குறைபாடுகள் இருந்த காரணத்தாலும், சென்னை வேதாகமச் சங்கம், எல்லா புரோட்டஸ்தாந்து சபைகளும் ஏற்றுக் கொள்ளும் விதமாக ஒரு புதிய தமிழ் மொழி பெயர்ப்பை உருவாக்கும் எண்ணத்தில், ஹென்றி பவர் ஐயரைத் தலைமை மொழி பெயர்ப்பாளராகவும், அவருக்கு உதவியாக மற்ற சபைகளைச் சேர்ந்த ஏழு பேரைக் கொண்ட ஒரு குழுவையும் நியமித்தது. இந்தக் குழுவில், டாக்டர் கால்டுவெல், சார்ஜென்ட் ஐயர், திரேசி ஐயர், திரு. முத்தையா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

1858 ஆம் ஆண்டு, பவர் ஐயர் மொழி பெயர்ப்பு வேலையைத் துவக்கினார். மொழி பெயர்ப்பில் தவறு வரக் கூடாது என்பதில் அதிகக் கவனமாக இருந்தபடியால், பிற அறிஞர்களின் கருத்துக்களையும், தனக்கு வந்த கடிதங்களின் பரிந்துரைகளையும், பத்திரிகையின் விமர்சனங்களையும் மனதிற் கொண்டு பணியாற்றினார். பவர் ஐயர் காட்டிய பொறுமையும், கடினஉழைப்பும், 1864ஆம் ஆண்டு, புதிய ஏற்பாட்டின் மொழி பெயர்ப்பையும், 1871ஆம் ஆண்டு, முழு வேதாகமத்தின் மொழி பெயர்ப்பையும் ஈந்தது. இந்த முழு வேதாகமத்தின் பிரதிகளும், ஜெபப்புத்தகத்தின் பிரதிகளும் அழகாகவும், சிறந்த முறையிலும் ‘பைன்டிங்’ செய்யப்பட்டு, 1874ஆம் ஆண்டு திருநெல்வேலிக்கு வந்த இங்கிலாந்து இளவரசருக்கு பரிசாக அளிக்கப்பட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த மொழிபெயர்ப்புதான், இரண்டு முறை திருத்தப்பட்டு, இன்று தமிழ் பேசும் கிறித்தவர்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் வேதாகமம் ஆகும்! இவரின் மொழிபெயர்ப்பு, ‘பவர் மொழிபெயர்ப்பு’, அல்லது ‘ஐக்கிய மொழிபெயர்ப்பு’ என்று அழைக்கப்படுகிறது.



பவர் ஐயரின் வாழ்க்கைக் குறிப்பு

பிரான்கோயிஸ் பூவியர் ;(Francois Bouvier) ஒரு பிரஞ்சுப் போர் வீரர். இந்தியாவில் நடைபெற்ற சண்டையில் கைதியானவர். இந்தியப் பெண்ணான ஜஸ்ட்டீனா (Justina) வை திருமணம் செய்து இந்தியாவிலேயே வாழ்ந்து மறைந்தவர். இத்தம்பதியர்களுக்கு, சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் இருக்கும் சீயோன் ஆலயத்தை அடுத்துள்ள இல்லத்தில் ஹென்றி பவர் ஐயர் பிறந்தார். (அருட்திரு.ஹென்றி பவர், 1813ஆம் ஆண்டு, ஜனவரித் திங்கள், 17ம் தேதி பிறந்ததாக ஜார்ஜ் கோட்டையில் உள்ள தூய.மேரி ஆலயப் பதிவேடு கூறுகிறது. ஆனால் பவர் குடும்பத்தார், 1812ஆம் ஆண்டு, டிசம்பர், 18ம் தேதியையே பவரின் பிறந்த நாளாகக் கொண்டாடி வருகிறார்கள். பவர் ஐயரின் கல்லறையில், 18-12-1812ல் பிறந்ததாகவும், 2-9-1885ல் இறந்ததாகவும் பொறிக்கப்பட்டுள்ளது.). இவர் பட்டாளத்தார் அனாதையர் ஆண் ஆசிரமத்தில் (Military Male Orphan Asylum) கல்வி பயின்றார். சென்னை ஆளுநரின் காரியதரிசி கர்னல். ஜான் கார்பிறே (Col. John Carfrae), இளைஞரான பவரை நேசித்ததால், பவருக்கு அநேக உதவிகளைச் செய்தார். மேலும், பேருபகாரியான கர்னல். ஜான் கார்பிறே, 1832ஆம் ஆண்டு, பவரை இங்கிலாந்துக்குத் தன்னோடு கூட்டிச் சென்றார். 1833ஆம் ஆண்டு, லண்டன் மிஷனெரி சங்கம் (LMS) நடத்தும் ஊழியரைப் பயிற்றுவிக்கும் கலாசாலையில் பவர் சேர்ந்து பயிற்சி பெற்றார். பின்பு, 1837ஆம் ஆண்டு, இந்தியா திரும்பினார். முதலில் திரிப்பசூரில் ஊழிய வேலையைத் துவக்கினார். பின்பு, 1838ஆம் ஆண்டு, புரசைவாக்கத்துக்குக் குடிபெயர்ந்தார்.

ஹென்றி பவரின் ஆன்மீகப் பணிகள்

1842ஆம் ஆண்டு, சுவிசேஷப் பிரபல்ய சங்கத்தில் (SPG) சேர்ந்து, 1843ஆம் ஆண்டு, உதவி குருவாகவும், 1845ஆம் ஆண்டு, குருவாகவும் அபிசேகம் பெற்றார். பவர் ஐயர், தஞ்சாவூருக்கு அருகாமையில் கிறிஸ்தவ சமய ஊழியரைப் பயிற்றுவிக்கும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, அதற்கு ‘வேதியர்புரம்’ என்றும் பெயரிட்டார். 1858ஆம் ஆண்டு, வேதியர்புரத்தை விட்டு நீங்கி, வேதாகம மொழி பெயர்ப்பில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டார். 1864ஆம் ஆண்டு, மொழிபெயர்ப்பு வேலையோடு வேப்பேரியிலுள்ள பரி. பவுல் ஆலயக் குருவாகவும் நியமனம் பெற்றார். 1871ஆம் ஆண்டு, சென்னைப் பல்கலைக் கழகத்தின் சிறப்பு உறுப்பினர் பதவியை ஏற்றார். ஆங்கிலத் திருச்சபையின் (Church of England), ஜெபப்புத்தகத்தை மொழிபெயர்ப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட குழுவிலும் ஓர் அங்கத்தினர் ஆனார். இந்த வேலை இரண்டு வருடங்கள் நடை பெற்றது. ஜெபப்புத்தக மொழிபெயர்ப்பு வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் கால கட்டத்தில், அதாவது, 1872ஆம் ஆண்டு, திருச்சிராப்பள்ளிக்கு மாற்றப்பட்டு, பின்பு திருநெல்வேலிக்கு அனுப்பப்பட்டார். அங்கிருந்து மீண்டும் வேப்பேரி ஆலயத்திற்கு வந்தார். 1877ஆம் ஆண்டு, கான்டர்பெரி பேராயர், பவர் ஐயருக்கு ‘இறையியற் கலைஞர்’ (Doctor of Divinity), என்னும் பட்டத்தை வழங்கினார். பவர் ஐயர் ஆங்கிலத்தைக் காட்டிலும் தமிழில் ஊழியம் செய்வதையே பெரிதும் விரும்பினார்.

ஹென்றி பவர் ஐயரின் மறைவு

பவர் ஐயரின் ஆராதனைகள் சடங்காச்சாரமற்றவையாக உள்ளன என்ற ஒரு சிலரின் குற்றச்சாட்டாலும், விரோதப் போக்காலும், வேப்பேரியிலிருந்து சாந்தோமுக்கு மாற்றப்பட்டார். அத்துடன் வேப்பேரி குருமனையை விட்டும் நீங்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். இவ்விதமான மாற்றங்களாலும், இன்னல்களாலும் பவர் ஐயர் சுகம் குன்றியவராகி தன்னுடைய இறுதி காலத்தில் சுகவாசத்தலமாகிய குற்றாலத்திற்கு வந்து, அங்கு வாழ்ந்து, 1885ஆம் ஆண்டு உயிர் நீத்தார். அன்னாரின் பூத உடல் பாளையங்கோட்டை, மிலிட்டரி லைன், கிறிஸ்து ஆலயக் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இன்றளவும் இக்கல்லறை நல்லவிதமாக பாதுகாக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் வருகிறது.

ஹென்றி பவர் குடும்பம்

அருட்திரு. ஹென்றி பவர் எம்மா டெய்லர் (Emma Taylor) என்ற பெண்ணை 09-05-1838 அன்று திருமணம் செய்தார். இவர்களுக்கு,

1.அனா பவர் (Anna Bower) (18-09-1839 – 19-12-1857)

2.ஜான் பவர் (John Bower) (29-09-1841 – 12-05-1913)

என இரண்டு பிள்ளைகள் இருந்தனர்.

அருட்திரு. ஹென்றி பவரின் முதல் மனைவி 1847 ஆம் ஆண்டு இறந்ததால், எலிசா ஜெஸி பிளக்கர் (Eliza Jessie Blacker) என்ற பெண்ணை 10-05-1847 அன்று மறுமணம் செய்தார். இவர்களுக்கு,

1.ஹென்றி பிரான்சிஸ் பவர் (Henry Francis Bower) (11-02-1848 – 01-09-1895)

2.வில்லியம் லோன் பவர் (William Loane Bower) (04-02-1849 - 08-05-1900)

3.பிரடிரிக் கார்டான் பவர் (Frederick Gordon Bower) (07-04-1852) – (03-04-1853)

4.அலெக்ஸாண்டர் ஜார்ஜ் பவர் (Alexander George Bower) (02-02-1854)

5.எம்மா எலிசா பவர் (Emma Eliza Bower) (02-10-1855 – 17-04-1856)

6.ராபர்ட் ஸ்டீபன் பவர் (Robert Stephen Bower) (15-03-1857)

7.இறந்தே பிறந்த குழந்தை (Stillborn Child) (17-09-1861)

என்று ஏழு பிள்ளைகள் பிறந்தனர். ஆக, அருட்திரு. ஹென்றி பவர் 9 குழந்தைகளுக்கு தந்தையாவார்.



ஹென்றி பவர் ஐயரின் இலக்கியப் படைப்புகள்

பவர் ஐயர், தமிழ், ஆங்கிலம், கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதம், கன்னடம், இந்துஸ்தானி ஆகிய மொழிகளை அறிந்த பன்மொழிப் புலவர் ஆவார். தமிழ் மொழியைச் சமணப் புலவர் சாஸ்திரம் ஐயரிடம் ஆர்வமுடன் கற்றார். பல நூல்களைப் படைத்தவர்.

பகவத்கீதையையும், நன்னூலையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.

1868ஆம் ஆண்டு சீவகசிந்தாமணி என்னும் பெயர் பெற்ற காப்பியத்தின் முதல் இலம்பகமாகிய நாமகள் இலம்பகத்தை மட்டும், நச்சினார்கினியர் உரையுடனும், ஆங்கில முன்னுரை, குறிப்புகள், சாஸ்திரம் ஐயர் எழுதிய சமண சமய சித்தாந்தம் பற்றிய கட்டுரையின் ஆங்கில ஆக்கம், காவியச் சுருக்கம் ஆகியவற்றுடன் ஒரு நூலை ஆக்கினார். இந்நூல் சென்னை வேப்பேரி கிறிஸ்தவ அறிவு பரப்புதல் சங்க அச்சகத்திலிருந்து அதே ஆண்டு (1868) வெளியிடப்பட்டது. 1870ஆம் ஆண்டு, சென்னைப் பல்கலைக் கழகத்தில் பயின்ற பி. ஏ. மாணவர்களுக்கு இந்த நாமகள் இலம்பகம் பாடமாக வைக்கப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

வேதநாயக சாஸ்திரியாரை நேரில் அறிந்தவர் பவர் ஐயர். அன்னாரின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார். சமயம், தத்துவம் பற்றிய சொற்களுக்குப் பொருள் தரும் வேத அகராதியும், இவரது சொற்பொழிவுகள் அடங்கிய நூலும் இவரின் தொகுப்பு நூல்கள் ஆகும்.

சமய ஒப்பீடு, தர்க்கம், மொழியியல் இவைகள் பற்றிய கட்டுரைகளையும் இவர் வரைந்துள்ளார். கிறிஸ்து சபை வரலாறும் இவர் எழுதியுள்ளதாக அறிகிறோம்.

1851ஆம் ஆண்டு, இந்து ஜாதிகள் பற்றிய ஆங்கிலக் கட்டுரை நூல் ஒன்றை வெளியிட்டார்.

1877ஆம் ஆண்டு, ‘நியாயப்பிரமாண விளக்கம்’, வெளியிடப் பெற்றது.

இவரின் பிற நூல்கள், ‘விசுவாசப்பிரமாண விளக்கம்’, ‘இந்து மதத்திற்கும், பாப்பு மதத்திற்கும் இருக்கிற சம்பந்த விளக்கம்’, ‘தர்மசாஸ்திர சாரம்’ என்பவையாகும்.

மேலும் ஹென்றி பவர் நன்னூலிடத்தும், திருக்குறளிடத்தும் அதிக ஈடுபாடு உடையவராயிருந்தார். “தமிழ் இலக்கணம் என்றால் அது பவணந்தியாரின் நன்னூலே! தமிழ் முதல்தர இலக்கியம் என்றால் அது திருவள்ளுவரின் திருக்குறளே”, என்ற கருத்தினை குறித்து வைத்துள்ளார்.



ஹென்றி பவர் கல்லறை வாசகங்கள்

திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ள மிலிட்டரி லைன், கிறிஸ்து ஆலயக் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள ஹென்றி பவர் கல்லறையில் கீழ்காணும் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

In Loving Memory
Of
Henry Bower, DD, Missionary SPG
An Eminent Dravidian Scholar
Principal Reviser of The Tamil version of The Bible
Auther of many valuable Tamil works
A laborious Missionary, helpful in every good work
A man of peace, Universally esteemed
born at Madras
on the 18th December 1812
Rested from his labours at Palamcotta
on the 2nd September 1885
“ His Works do follow him”
"அவர் மரித்தும் பேசுகிறார்"

ஹென்றி பவர் ஐயர் கல்லறையில், ஆங்கில வாசகங்களின் முடிவில், ‘அவர் மரித்தும் பேசுகிறார்’ என்கிற தமிழ் வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது. ஆம்..! பவர் ஐயர் கிறிஸ்தவ சமுதாயத்துக்கும், தமிழ் மக்களுக்கும், தமிழுக்கும் விட்டுச் சென்றிருப்பது அவரின் அரிய நூல்களாகும். அவரின் நூல்கள் இன்றும் நம்மோடு அவரை நினைவில் கொண்டு பேச வைத்துக் கொண்டிருக்கின்றன.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/identification/p2.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License