கல்லூரிக் குறும்பு
நானும் என் நண்பனும் கல்லூரியில் சேர்ந்த புதிதில் ராகிங்கிற்கு பயந்து வகுப்பறையை விட்டு வெளியே வரவேயில்லை.அப்படியிருந்தும் ஒருநாள் இருவருமாய் முதுநிலை மாணவர்களிடம் மாட்டிக் கொண்டோம்.
எங்கள் முதுநிலை மாணவர்களில் ஒருவர் தன் பையிலிருந்து ஒரு பேனாவை எடுத்து தரையில் போட்டு "இந்தப் பேனா நூறு கிலோ எடைன்னு நினைச்சுக்கிட்டு தூக்கு பார்ப்போம் "என்றார்.
நான் "ஆ...ஊ..." என்று பளுவைத் தூக்குவது போல் பாவனை செய்தேன்.
அடுத்து என் நண்பனை அவ்வாறே செய்ய வலியுறுத்தினர்.
என் நண்பன் கீழே குனிந்துப் பேனாவை லேசாய் அசைத்து விட்டு "ரொம்பக் கனமாக இருக்கு! என்னால தூக்கவே முடியலை.. "என்று சொல்ல ,
முதுநிலை மாணவர்கள் நண்பனின் புத்திக் கூர்மையையும், சமயோஜித பேச்சையும் வியந்து பாராட்டினார்கள்.
வாயுள்ள பிள்ளை இல்லையில்லை.... அறிவுள்ள பிழைக்குங்கிறது உண்மைதாங்க!
-காரைக்கால் கே. பிரபாகரன்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.