முத்துக்கமலம் இணைய வழிச் சிறுகதைகள் - மதிப்பீடு
மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் தமிழ்த்துறையில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பயின்ற திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி த. சுதந்திராதேவி (தற்போது மதுரை மாவட்டக் காவல்துறையில் சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார்) (பதிவு எண்: A4C 6060007) "முத்துக்கமலம் இணையவழிச் சிறுகதைகள் - மதிப்பீடு" எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு ஆய்வியல் நிறைஞர் (M.Phil.,) பட்டம் பெற்றிருக்கிறார். திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரியும் முனைவர். துரை. மணிகண்டன் அவர்கள் இவரது ஆய்வுக்கான நெறியாளராகச் செயல்பட்டார்.
- வி. பி. மணிகண்டன்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.