ஜிகர்தண்டா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பால் - 1 லிட்டர்
2. கடல் பாசி - சிறிது (இதை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்துக் காய்ச்ச வேண்டும்)
3. சர்பத்துக்கு போடும் பாதாம்பிசின் -ஒரு மேசைக்கரண்டி (இதை இரவே தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும்)
4. ஐஸ்க்ரீம் -1 கப்
5. ரோஸ் மில்க் - 1 ஸ்பூன்
6. செர்ரி பழங்கள் - தேவையான அளவு
செய்முறை:
1. அடி கனமான பாதிர்த்தில் பாலை கலர் இளஞ்சிவப்பு வரும் வரை காய்ச்சவும். அதாவது ஒரு லிட்டர் பால் அரை லிட்டர் ஆகும் வரை நன்றாகக் காய்ச்சவும்.
2. காய்ச்சிய பாலை குளிர்பதனப் பெட்டியில் (ஃபிரிஜ்ஜில்) நன்கு குளிர வைத்து வேண்டும்.
3. கடற்பாசியை காய்ச்சி ஒரு தட்டில் ஊற்றவும். இது கெட்டியாகியதும் துருவிக் கொள்ள வேண்டும்.
4. பால் நன்றாய்க் குளிர்ந்தவுடன் ஒரு சிறிய கிண்ணத்தில் பாலை ஊற்றி, அதில் கடல்பாசி சிறிது, ஊறவைத்த பிசின் சிறிது போட்டு ரோஸ் மில்க் ஊற்றி விடவும்.
5. அதன் மேல் ஐஸ்க்ரீம் வைத்து அழகுக்காக மேலே செர்ரி பழங்கள் வைத்து விடுங்கள்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.