பாதாம் துளசி குளிர் பானம்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பாதாம் (ஊற வைத்த தோல் நீக்கப்பட்டது) - 2 மேசைக்கரண்டி
2. முலாம்பழம் விதைகள் (ஊற வைத்தது) - 2 மேசைக்கரண்டி
3. கசகசா விதைகள் (ஊற வைத்தது) - 1 மேசைக்கரண்டி
4. பெருஞ்சீரகம் விதைகள் (ஊற வைத்தது) - ¼ கப்
5. சர்க்கரை - ¼ கோப்பை
6. குங்குமப்பூ இழைகள் - சிறிது
7. துளசி இலைகள் - 4 எண்ணம்
8. பால் - 2 கோப்பை
9. பச்சை ஏலக்காய்த் தூள் - ½ மேசைக்கரண்டி
10. மிளகுத்தூள் - ½ தேக்கரண்டி
செய்முறை:
1. ஒரு கனமான பாத்திரத்தில், பால் மற்றும் குங்குமப்பூ இழைகளை கொதிக்க வைக்கவும்.
2. பாலில் சர்க்கரையைக் கரைக்கவும்.
3. பெருஞ்சீரகம் விதைகள், கசகசா விதைகள், முலாம் பழ விதைகள் மற்றும் பாதாம் ஆகியவற்றை மென்மையாக விழுது போல அரைத்துக் கொள்ளவும்.
4. துளசி இலைகள் மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும்.
5. அரைத்த விழுதுகளைப் பாலில் சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும்.
6. அதனைப் பின்னர் இறக்கி வைத்து ஆற வைக்கவும்.
7. ஆறிய பின்பு, அதனை குளிர்பதனப் பெட்டியில் வைத்து குளிர்ச்சியாக்கிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.