தாளிச்ச மோர்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. மோர் - 2 கோப்பை
2. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
3. இஞ்சி - சிறிது
4. கடுகு உளுந்து - சிறிது
5. கருவேப்பிலை - சிறிது
6. மல்லித்தழை - சிறிது
7. எண்ணெய் - தேவையான அளவு
8. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. இஞ்சி மற்றும் பச்சை மிளகாயைப் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
2. ஒரு சூடான கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு உளுந்து, கருவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும்.
3. வதங்கிய பின்னர் அதில் மோரைக் கலந்து விடவும்.
4. கலக்கிய மோரைக் கீழே இறக்கித் தேவையான உப்பு சேர்த்து, மல்லித்தழை தூவிப் பரிமாறலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.