நெல்லிக்காய்ச் சாறு கலவை
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. நெல்லிக்காய் - 500 கிராம்
2. வெல்லம் - 500 கிராம்
3. சுக்குத்தூள் - 2 தேக்கரண்டி
4. ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை:
1. முதலில் நெல்லிக்காயை நன்கு கழுவி இட்லிப் பாத்திரத்தில் வைத்து 3 நிமிடம் ஆவியில் வேக வைத்து ஆற வைக்கவும்.
2. ஆறிய பின்பு, நெல்லிக்காயின் விதைகளை நீக்கி விட்டு மிக்ஸியில் தண்ணீர் விடாமல் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
3. வெல்லத்தை 1/2 கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்துக் கரைத்து வடிகட்டவும்.
4. வெல்லக் கரைசலில் நெல்லிக்காய் விழுதைப் போட்டு நன்கு கலந்து அடுப்பில் வைத்துக் கிளறி விடவும்.
5. சிறிது நேரம் தண்ணீர் அடங்கும் வரை மூடி வைக்கவும்.
6. நெல்லிக்காய் விழுது சுருண்டு வரும் வரை கிளறிக் கொண்டிருக்கவும்.
7. அத்துடன் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் போட்டுக் கிளறி விடவும்.
8. சுருண்டு வெந்ததும் இறக்கி மூடி போட்டு ஆற வைக்கவும்.
9. ஆறிய பின் காற்று புகாத பாட்டிலில் அடைத்து வைத்துப் பயன்படுத்தலாம். (ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்)
10. தேவையான போது, தண்ணீரில் கலந்து பருகலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.