வெள்ளைப்பூசணிச் சாறு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. வெள்ளைப் பூசணித் துண்டுகள் - 1 கோப்பை
2. இஞ்சி - சிறிது
3. பூண்டு - 2 பல்
4. உப்பு - சிறிதளவு
5. எலுமிச்சை பழம் - 1 எண்ணம்
6. தேன் - 1 தேக்கரண்டி
7. புதினா இலைகள் - 6 எண்ணம்
செய்முறை:
1. பூசணிக்காயின் மேல் தோலைச் சீவிக் கொள்ளவும்.
2. பூசணியுடன் பூண்டு, இஞ்சி மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
3. பூசணிச் சாறை வடிகட்டிக் கொள்ளவும்.
4. எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
5. பூசணிச் சாறு, எலுமிச்சைச் சாறு, உப்பு, தேன் மற்றும் புதினா இலைகள் என்று அனைத்துப் பொருட்களையும் சேர்த்து, நன்கு கலந்து பரிமாறலாம்.
குறிப்பு: காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் நிறையப் பலன்களைப் பெற முடியும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.