நுங்கு இளநீர் ஜூஸ்
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. நுங்கு - 5 எண்ணம்
2. இளநீர் - 200 மி.லி
3. சர்க்கரை - 2 மேசைக்கரண்டி
4. பொடியாக நறுக்கிய நுங்கு - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
1. நுங்கின் தோலை உரித்துக் கொள்ளவும்.
2. மிக்ஸியின் பெரிய ஜாரில் தோலுரித்த நுங்கு, சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும்.
3. அதனுடன் இளநீரைச் சேர்த்து நன்கு அரைக்கவும்.
4. அரைத்ததைப் பாத்திரத்தில் சேகரிக்கவும்.
5. பிறகு டம்ளர்களில் ஊற்றி, மேலே நுங்கு துண்டுகளைப் போட்டுப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.